என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • மூன்றாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (3-7), 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான மேட்டியோ பிரெட்டினியுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-3), 7-6 (7-4), 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
    • காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் நவாமி ஒசாகா 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    • மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக செல்கின்றனர்.
    • பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் அலை கடல் என திரண்டுள்ளனர்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாசி-சாண்டர் அரெண்ட்ஸ்

    ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
    • உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.

    அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ரூட் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பேபியோ போஜினி உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 4-6, 5-7, 7-6 (7-1), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.
    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

    டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதோடு பிரதமர் மோடியுடன் அவர்கள் காலை உணவில் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் இன்று மாலை மும்பையில் நகர் வலம் வரவுள்ளனர். 


    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா நடனம் ஆடி மகிழ்ந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


    இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவரியா விடுதிக்கு சென்றனர். அங்கு இந்திய அணி வீரர்களுக்கு மேளதாளங்களுடன் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுதிக்குள் நுழைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மேளதாள இசைக்கு ஏற்றவாரு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


    அதன்பிறகு விடுதி சார்பில் விசேஷமாக உருவாக்கப்பட்ட கேக்-ஐ இந்திய வீரர்கள் வெட்டினர். இந்திய வீரர்கள் வருகையால் தங்கும் விடுதி உற்சாக நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு பேருந்து மூலம் சென்றுள்ளனர்.


    பிரதமரை சந்திக்கும் இந்திய அணியிர் மும்பையில் திறந்தவெளி வாகனத்தில் உலா வரவுள்ளனர். இதற்காக திறந்தவெளி வாகனம் சிறப்பு ஸ்டிக்கர்களால் அசத்தலாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இன்று தங்களது 15 ஆம் ஆண்டு திருமண நாளை எம்.எஸ்.டோனி - சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
    • 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

    அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.

    பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    • ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
    • கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

    அதில், இந்தியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்த ஜடேஜா 45 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்தை நிறைவு செய்துள்ளார்.

    அதே சமயம் ஜடேஜாவை முந்தி 49 புள்ளிகளுடன் 78 ஆவது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுத்துள்ள கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ×