என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார்.
    • பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து பேசினார். அப்போது 15 வருடங்களில் இதுபோன்ற ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா மிகவும் அதிகமான வகையில் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.

    பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று (பாராட்டு விழா) என்ன பார்க்கிறனோ, அதை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

    சச்சின் தெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்திச் சென்றார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணி இன்று இந்தியா வந்தடைந்தது.
    • மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது. மும்பையில் இந்திய அணிக்கு வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மரைன் டிரைவ் பகுதியில் இருபக்கமும் குவிந்து வீரர்களை வரவேற்றனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அதன்பின் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் "ரசிகர்களின் இந்த அன்பை இழக்கப் போகிறேன். இன்று இரவு தெருக்களில் நான் பார்த்ததை (ரசிகர்களின் வரவேற்பு) ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    விராட் கோலி பேசும்போது "2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது சீனியில் வீரர்கள் அழுத எமோசன் உடன் நான் தொடர்பு கொள்ள முடியவில்ல. ஆனால் தற்போது அதை செய்கிறேன்" என்றார்.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன்.

    2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01-ம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை இறுதிசெய்யவில்லை. 

    • 2022-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
    • இவரது தலைமையைில் இரண்டு வருடங்களில் யுனைடெட் அணி இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் முன்னணி அணிகளில் ஒன்றாக மான்செஸ்டர் யுனைடெட் அணி திகழ்கிறது. இந்த அணியின் பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த எரிக் டென் ஹேக் (Erik Ten Hag) இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    2025-ம் ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைனெட் நிர்வாகம் அவரை தொடர்ந்து பயிற்சியாளராக வைத்துக் கொள்ள விரும்பியது. இதனால் எரிக் டென் ஹேக்கின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. இதனால் 2026 வரை மான்செஸ்ட் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார்.

    அணியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற ஒப்பந்தம் நிறைவேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என 54 வயதான எரிக் டென் ஹேக் தெரிவித்துள்ளார்.

    அஜாக்ஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இரண்டு வருடங்களில் இரண்டு கோப்பைகைளை யுனைடெட் அணி வென்றுள்ளது.

    எரிக் டென் ஹேக்கின் முதல் சீனில் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் 3-வது இடம் பிடித்தது. கரபவோ கோப்பை இறுதிப் போட்டியில் நியூகேஸ்டில் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் 2-வது சீசனில் பிரீமியர் லீக்கில் 8-வது இடமே பிடித்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் சுற்றுடன் வெளியேறியது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக 201 எஃப்.ஏ. கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

    • திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
    • 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 28 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 28 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்-அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடி, குரோசியாவின் மேட் பாவிக்-எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ ஜோடி மோதியது. இதில் இந்தியாவின் பாலாஜி ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    • சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைய உள்ளனர்.

    இந்நிலையில் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    இதனையடுத்து திறந்தவெளி பஸ்சில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி உள்ளனர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்ட நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் (ரசிகர்கள்) நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். வெற்றியை மும்பையில் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்துள்ளனர்.
    • ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டு வருகின்றனர்.

    2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். காலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் மும்பைக்கு புறப்படனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். வான்கடே மைதானத்தில் வாழ்த்து நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் என்று அவரது பெயரை கோஷமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • இந்த தொடரின் முதல் டி20 போட்டி வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணியினர் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சார்ல் லாங்கேவெல்டை பந்து வீச்சு பயிற்சியாளராக ஜிம்பாப்வே நியமித்துள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக டியான் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளனர் .

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • மூன்றாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (3-7), 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான மேட்டியோ பிரெட்டினியுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-3), 7-6 (7-4), 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
    • காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    ×