search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premier League"

    யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். #ManUnited #EPL
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தவரிசையில் 6-வது இடம்பிடித்து யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.

    இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.



    முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
    2018-19 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு அறிவிக்கப்படும் பிரிமீயர் லீக் கால்பந்து அணியில் பால் போக்போவிற்கு இடம் கிடைத்துள்ளது. #PremierLeague
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு நடைபெறும் உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். இதில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உள்பட பல முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.

    பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
    மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். #ManchesterUnited
    போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோஸ் மவுரினோ கடந்த 2016-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த சில மாதங்களாக இவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரருமான பால் போக்பா ஆகியோருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது.

    இதற்கிடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயரை தற்காலிக பயிற்சியாளராக நியமித்துள்ளது.


    சோல்ஸ்க்ஜயர்

    ஜோஸ் மவுரினோ 2004 முதல் 2007 வரை செல்சி அணியிலும், 2008 முதல் 2010 வரை இன்டர் மிலன் அணியிலும் 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியிலும், 2013 முதல் 2015 வரை செல்சி அணியிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
    ×