என் மலர்
நீங்கள் தேடியது "பிரீமியர் லீக் கால்பந்து"
- லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றி அணிவகுப்பு நடந்தது.
- ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டங்களின் போது பெரும் விபத்து ஏற்பட்டது.
ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் நான்கு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.
லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பலத்த மழை பெய்த போதிலும், ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது ஒரு கார் கூட்டத்திற்குள் வேகமாக சென்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தாங்களாகவே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். மேலும் இது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியது.
- இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.
- 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.
2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்புல் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 16- வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஜடோன் சான்சோ கோல் அடித்தார்.இதனால் முதல் பாதியில் 1-0 என மான்செஸ்டர் யுனைடெட் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.பின்னர் லிவர்புல் அணியின் மொகமது சலா 81-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.






