search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் அதிரடி
    X

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் அதிரடி

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன்.

    2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01-ம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை இறுதிசெய்யவில்லை.

    Next Story
    ×