என் மலர்
விளையாட்டு
- இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன.
- இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும்.
லாகூர்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐ.சி.சி. தொடர் இதுவாகும்.
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத இந்திய அணி, இப்போதும் அங்கு செல்ல மறுத்து விட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே நிலைமை ஏற்பட்ட போது, இந்திய அணியின் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த முறை இந்திய அணியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
மேலும் நக்வி கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும்' என்றார்.
- பந்தின் பாதிப்பக்கம் வெல்ல நிறமும் மீதி பக்கம் சிவப்பு நிறமும் உள்ளது.
- இந்த பந்தை கொண்டு பயிற்சி செய்தால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஒட்டி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த பந்தை பயன்படுத்தி மிட்செல் ஸ்டார்க் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பந்தின் பாதிப்பக்கம் வெள்ளை நிறமும் மீதி பக்கம் சிவப்பு நிறமும் உள்ளது. இந்த பந்தை கொண்டு பயிற்சி செய்தால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று சொல்லப்படுகிறது.
- மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
- பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.
2024 ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு அடுத்தபடியாக ஐபிஎல் ஏலத்தில் சக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.
இந்நிலையில், வரும் ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் போவார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
"ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்கின் சாதனை ஆபத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் அதை முறியடிக்கத் தயாராக உள்ளார்" என்று இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் வெற்றி பெற்றார்
- காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
டாடா ஸ்டீல் செஸ் இந்தியா திருவிழா 2024 நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் இளம் வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி வெற்றி பெற்றார்.
உலகின் நம்பர் 1 செஸ் ஜாம்பவான் நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சன், பிரிஸ்டி முகர்ஜியிடம் டிராபியை கொடுக்கும் சமயத்தில் பிரிஸ்டி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பிரஸ்டியின் செயலை கவனித்த கார்ல்சன் முகத்திலும் புன்னகை அரும்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாடா ஸ்டீல் செஸ் இந்தியா நிகழ்வானது மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தன்யோ ஆடிட்டோரியத்தில் வைத்து நவம்பர் 13 தொடங்கி நேற்று நவம்பர் 17 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- 3 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டானிஸ் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார்.
- டி20 கிரிக்கெட்டில் 119 இன்னிங்ஸ்களில் விளையாடிய பாபர் அசாம் 4192 ரன்கள் குவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் 41 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2 ஆம் இடம் பிடித்தார்.
டி20I கிரிக்கெட்டில் 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 4231 ரன்கள் குவித்த ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 119 இன்னிங்ஸ்களில் விளையாடி 4192 ரன்கள் குவித்து பாபர் அசாம் 2-ம் இடமும் 117 இன்னிங்ஸ்களில் விளையாடி 4188 ரன்கள் குவித்து விராட் கோலி 3-ம் இடத்தில உள்ளார்.
கோலியும் ரோகித்தும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் விரைவில் இப்பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யாராலும் தப்பிக்க முடியாது.
- கடந்த சீசனில் 2 போட்டிகளில் அஸ்வின் என்னை ஆதிக்கம் செலுத்தினார்.
சிட்னி:
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறி கொண்டே இருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போதும் அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டார்.
இதற்காக அஸ்வினை போலவே பவுலிங் செய்யும் ஒருவரை வைத்து பயிற்சி மேற்கொண்டார். இதனால் அஸ்வின் - ஸ்டீவ் ஸ்மித் இடையிலான போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில்
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:-
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் போது, ஒரு வீரர் மீது இன்னொரு வீரர் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 10 இன்னிங்ஸில் அந்த இரு வீரர்களும் நேரடியாக மோதுவார்கள். அப்படியான மோதல் ஏற்படும் போது மனதளவிலும் பல்வேறு சவால்களை நாம் சந்திக்க நேரிடும்.
சில நேரங்களில் அந்த பவுலரிடம் ஒரு பேட்ஸ்மேன் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தால், அந்த பேட்ஸ்மேனுக்கு இயல்பாகவே அழுத்தம் அதிகரிக்கும். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒழிந்து கொள்வதை போல், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யாராலும் தப்பிக்க முடியாது.
கடந்த சில ஆண்டுகளாகவே எனக்கும் அஸ்வினுக்கும் இடையில் நல்ல மோதல் இருக்கிறது. அடிலெய்ட் மற்றும் எம்சிஜி மைதானத்தில் அஸ்வின் எனது விக்கெட்டை எடுத்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதில் எம்சிஜியில் லெக் ஸ்லிப் திசையில் விக்கெட்டை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா மண்ணில் ஆஃப் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழப்பதே எனக்கு பிடிக்காது. வலதுகை பேட்ஸ்மேன்களால் ஆஃப் ஸ்பின்னர்களை எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் அஸ்வின் மிகச்சிறந்த பவுலர். அவரும் நிச்சயம் சிறந்த திட்டங்களுடன் வருவார்.
கடந்த சீசனில் 2 போட்டிகளில் அஸ்வின் என்னை ஆதிக்கம் செலுத்தினார். அதேபோல் எஸ்சிஜி மைதானத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் விளையாடி அஸ்வின் மீது என்னால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதனால் இம்முறையும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே திட்டமாக உள்ளது. அவரை செட்டிலாகவிடாமல் ஒரே லெந்தில் வீச விடாமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
- 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.
சென்னை:
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் சர்வதேச பீடே ரேடட் செஸ் போட்டி நடைபெற்றது. 8 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், ஒடிசா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழக வீரர் ஏ.ஆர்.இளம்பர்தி சாம்பியன் பட்டம் பெற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டரான (ஐ.எம்) அவர் 7.5 புள்ளிகள் பெற்றார். மற்ற தமிழக வீரர்களான பாலசுப்பிரமணியன், பிரவீன்குமார், லட்சுமண், விக்னேஷ் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்று 2 முதல் 5-வது இடங்களை பிடித்தனர். சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.
பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டரும், இந்திய பெண்கள் செஸ் அணி பயிற்சியாளருமான எம்.ஷியாம் சுந்தர், குருநானக் ககல்லூரி, பொதுச்செயலாளரும், தாளாளருமான மஞ்சித் சிங் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.
- பெர்த் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆடமாட்டார்கள்.
- பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இந்தியா ஏ அணி வீரர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.
பெர்த்:
5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி வருகிற 22 -ந் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இந்தியா ஏ அணி வீரர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.
பெர்த் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆடமாட்டார்கள். 2-வது குழந்தை பிறந்ததால் ரோகித் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை. சுப்மன்கில்லுக்கு கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று உள்ள தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அவர் இந்தியா ஏ அணி வீரர்களுடன் தாயகம் திரும்ப வேண்டாம் என்று தேர்வுக்குழு உத்தரவிட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக படிக்கல் 36, 88, 26 மற்றும் 1 ரன்கள் எடுத்தார்.
- கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை.
- அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது:-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் ரன் குவிப்பது கடும் சவாலாக இருக்கும்.
தற்போதுள்ள வீரர்களில் விராட் கோலி மிகச் சிறந்தவர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறார். கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் முதல் 2 இன்னிங்ஸ்களில் அவர் குறைந்த ரன்னை எடுத்தால் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தொடர் முழுவதுமே அவரால் சிறப்பாக ஆட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்சினையை நிச்சயம் கோலியும் உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது மன உறுதியை உடைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக விமர்சனங்களை வைக்கலாம். களத்தில் அவருடன் வாக்குவாதத்திலோ அல்லது மோதலிலோ ஈடுபட்டால், அவரால் அதிக ரன் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கோலி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது மிகவும் உச்சத்தில் இருப்பார்.
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் தொடக்கம் முதலே திட்டங்களுடன் இந்திய அணியை பலவீனமடைய செய்தால், ஆஸ்திரேலியாவால் எளிதாக தொடரை கைப்பற்ற முடியும்.
எனவே இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலான தொடர்தான். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆஸ்திரேலியாவும் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் விராட் கோலி 34 டெஸ்டில் 31.68 ரன் சராசரியுடன் 1,838 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் மொத்தமாக 118 டெஸ்டில் 9,040 ரன்களை குவித்துள்ளார். சராசரி 47.83 ஆகும். ஆஸ்திரேலியாவுடன் 25 டெஸ்டில் ஆடி 2,042 ரன்களை எடுத்து உள்ளார். அந்த அணிக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அதிகபட்சமாக 186 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆகிப் ஜாவித்தை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
- டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக கில்லெஸ்பி உள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேரி கிர்ஸ்டன் பதவி விலகினார்.
இதையடுத்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஒருநாள் மற்றும் 20 ஒவர் போட்டி அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கில்லெஸ்பியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மூன்று வடிவிலான போட்டிக்கும் ஒரே பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவித்தை (வயது 52) நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த வதந்தியை மறுத்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில்லெஸ்பியே தொடர்வார் எனவும் தெரிவித்துள்ளது.
- ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள்.
- ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைக்காததால் இவர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள். அவர் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் இலக்கு ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார். ஏனெனில் டெல்லிக்கு இப்போது கேப்டன் தேவை. ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணியும் ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தி ஸ்ரேயாஸ் அய்யரை எடுக்க முயற்சிக்கலாம்' என்றார்.






