என் மலர்
விளையாட்டு
- போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும்.
- கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது- மாநில மந்திரி
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
- ரபேல் நடால் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
- பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண் தரையில் கிங்காக விளங்கியவர். களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
38 வயதாகும் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடல் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்-ஐ எதிர்கொண்டார்.
இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார். இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் (மலாகா) கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்த நடாலுக்கு தோல்வி ஏற்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு 29 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வெற்றி சராசரியில் சாதனைப்படைத்துள்ளார்.

தொழில்முறை டென்னிஸ் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். காயம் அவரை இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது.
டேவிஸ் கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தேன். தற்போது கடைசி போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். ஆகவே, நாங்கள் வட்டத்தை முடித்துள்ளோம். என நடால் நகைச்சுவையாக தெரிவித்தார்.
ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். நடால் 22 பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதை இந்தியா தெரிவித்துவிட்டது.
- பாகிஸ்தானை விட்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்றமாட்டோம் என பிசிபி உறுதி.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்காது எனத் தெரிவித்துவிட்டது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோயிப் அக்தர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியாவை தனது மண்ணுக்குக்கு அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என்றால் இரண்டு விசயங்கள் நடைபெறும்.
முதலில் ஸ்பான்சர்சிப்பில் மூலம் பெறும் வருவாயில் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழக்க நேரிடும். 2-வது இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து லாகூரில் விளையாடி தோற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் சரி, எது நடந்தாலும் சிறந்ததாக இருக்கும்" என்றார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன், உபி யோதாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், இரு அணிகளும் 29-29 என்ற புள்ளிகளை எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.
இதில் ரஜாவத் முதல் செட்டை 24-22 என கைப்பற்றினார். இதில் சுதாரித்த வார்டோய் அடுத்த செட்களை 21-13, 21-18 என வென்றார். 3வது சுற்றில் முன்னிலை பெற்ற ரஜாவத் கடைசியில் தோல்வி அடைந்தார்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- அந்த அணி 21 ஓவரில் 112 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது.
பல்லெகலே:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 என கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 21 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னும், ஹென்ரி நிகோலஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.
- பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் நடந்து வருகிறது.
- லீக் சுற்று முடிவில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ராஜ்கிர்:
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
தென் கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி) 5-வது இடமும், தாய்லாந்து (ஒரு டிரா, 4 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொண்டது.
இதில் இந்திய அணி 2-0 என ஜப்பானை வவீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
பிற்பகலில் நடந்த முதல் அரையிறுதியில் மலேசியாவை சீனா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபமா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, அமெரிக்காவின் பெய்வென் ஜெங் உடன் மோதினார்.
இதில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
கேப்டவுன்:
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .
- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை.
- ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வீரர்களை தக்கவைத்துள்ளது. அக்சர் படேல் ரூ.16.5 கோடி, குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடி, தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி, அபிஷேக் போரெல் ரூ.4 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், "டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் பெயர் இல்லாததற்கு பணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் வாங்கும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்த ரிஷப் பண்ட், "டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி-ஜென்னி ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
- இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் மட்டுமே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில போட்டிகளில் சொதப்பிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.
காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி உள்ளார். மேலும் கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதில் விளையாடிய அணியில் இருந்து உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சயாலி சத்கரே ஆகிய நான்கு பேர் இடம் பெறவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி , பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.






