search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Davis Cup"

    • இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின.
    • இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    மலாகா:

    கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ஸ்பெயினில் இந்த தொடர் நடைபெற்றது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. இதில் 2-0 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6-3 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

    1976-ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தினார்.

    லண்டன்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து ரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி வெறுப்பேற்றினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசுகையில், வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    செர்பியாவிற்கு எதிரான உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்று போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியாமல் 0-4 என படுதோல்வியடைந்தது #DavisCup
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடைபெற்றது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வியை தழுவினர். இதனால் இந்தியா 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது.

    2-வது நாள் ஆட்டத்தில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மைனேனி ஜோடி களம் இறங்கியது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-7 (5), 2 - 6, 6 -7 (4) என்ற செட் கணக்கில் போதிய அனுபவம் இல்லாத செர்பியாவின் நிகோலா மிலோஜெவிச் - டேனிலோ பெட்ரோவிச் இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இந்தியா 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

    மாற்று ஒற்றையர் ஆட்டங்களின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலையிலும், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி பெட்ஜா கிர்ஸ்டினை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீராம் பாலாஜி 3-6, 1-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியா 0-4 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது இரு அணிகளும் கடைசி போட்டியில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தது. இதனால் செர்பியா 4-0 என இந்தியாவை துவம்சம் செய்தது.
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-செர்பியா அணிகள் இடையிலான ஆட்டம் செர்பியாவில் இன்று தொடங்குகிறது. #DavisCup #India #Serbia
    கிரால்ஜெவோ:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் செர்பியாவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வீரர்கள் யார்? யாருடன் மோதுவார்கள் என்பது நேற்று அறிவிக்கப்பட்டது.

    இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 135-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ராம்குமார், 86-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் லாஸ்லோ ஜெரோவை சந்திக்கிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 162-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 56-ம் நிலை வீரரான செர்பியாவின் துசான் லாஜோவிக்குடன் மோதுகிறார்.

    நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக்-டேனிலோ பெட்ரோவிக் இணையை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், துசான் லாஜோவிக்கையும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், லாஸ்லோ ஜெரோவையும் சந்திக்கின்றனர். செர்பியா அணியில் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் இடம் பெறாததால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில் காயம் அடைந்த யுகி பாம்ப்ரி இந்திய அணியில் இடம் பெறாதது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷன் அலி கருத்து தெரிவிக்கையில், ‘களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில் நமது அணியில் யுகி பாம்ப்ரி இடம் பெறாததால் பெரிய பின்னடைவு எதுவும் இல்லை. கடந்த 9 மாதங்களில் யுகி பாம்பிரி களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் ஒன்றிரண்டில் மட்டுமே விளையாடி இருக்கிறார். நமது மற்ற வீரர்களை விட யுகி பாம்ப்ரி தரவரிசையில் உயர்ந்தவர் என்றாலும், களிமண் தரையிலான போட்டிக்கு அவருக்கு ஆட்டம் பொருந்தாது. ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் ஐரோப்பியாவில் களிமண் தரை ஆடுகளங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்த அனுபவத்தை இந்த போட்டியில் அவர்கள் பயன்படுத்துவார்கள்’ என்றார்.  #DavisCup #India #Serbia 
    ×