search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: செர்பியாவிடம் இந்தியா 0-4 என படுதோல்வி
    X

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: செர்பியாவிடம் இந்தியா 0-4 என படுதோல்வி

    செர்பியாவிற்கு எதிரான உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்று போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியாமல் 0-4 என படுதோல்வியடைந்தது #DavisCup
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடைபெற்றது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வியை தழுவினர். இதனால் இந்தியா 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது.

    2-வது நாள் ஆட்டத்தில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மைனேனி ஜோடி களம் இறங்கியது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-7 (5), 2 - 6, 6 -7 (4) என்ற செட் கணக்கில் போதிய அனுபவம் இல்லாத செர்பியாவின் நிகோலா மிலோஜெவிச் - டேனிலோ பெட்ரோவிச் இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இந்தியா 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

    மாற்று ஒற்றையர் ஆட்டங்களின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலையிலும், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி பெட்ஜா கிர்ஸ்டினை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீராம் பாலாஜி 3-6, 1-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியா 0-4 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது இரு அணிகளும் கடைசி போட்டியில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தது. இதனால் செர்பியா 4-0 என இந்தியாவை துவம்சம் செய்தது.
    Next Story
    ×