என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட் தொடர்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
    X

    டி20 கிரிக்கெட் தொடர்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

    • 3 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.
    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டானிஸ் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    Next Story
    ×