என் மலர்
விளையாட்டு
- விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 6 போட்டிகளில் கருண் நாயர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மிக சிறப்பாக விலையை வரும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இந்நிலையில், கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.
- ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.
- பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது முதல் 2 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்துள்ள கட்டுப்பாடுகள்:
1. இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.
2. இனி இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.
3. எந்தத் தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்லவேண்டும்.
4. வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு தொடர்பாக கேப்டன் ரோகித் மற்றும் பிசிசிஐ-ன் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு மைக் ஆன் செய்யப்பட்டது தெரியாமல் அஜித் அகர்கரிடம் பேசிய ரோகித், "இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று விதிமுறை குறித்து பிசிசிஐ செயலாளருடன் நான் பேச வேண்டும். அனைத்து வீரர்களும் என்னிடம் இதை பற்றி தான் கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
- ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
- சோஃபி எக்லெஸ்டோன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஆஷ்லே கார்ட்னர் பிடித்தார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வந்தது.
3 போட்டிகள் இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 222 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இப்போட்டியில் 41 ஆவது ஓவரில் சோஃபி எக்லெஸ்டோன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் அட்டகாசமாக பிடித்தார்.
பெண்கள் கிரிக்கெட்டின் மிக கேட்ச்களில் இதுவும் ஒன்று என்று அந்த விடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் தவிர மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
- மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும்.
- என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுதான் நான் விஜய் ஹசாரே தொடரில் அசத்தலாக பேட்டிங் செய்ய காரணம். மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இவ்வாறு கருண் நாயர் கூறினார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ஜோடி, நுனோ போர்ஜஸ்- பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.
- போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலா ஜோடி போர்த்துகீசிய ஜோடியான நுனோ போர்ஜஸ் மற்றும் பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
- ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.
மும்பை:
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் 6 இன்னிங்சில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல விராட் கோலியின் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோகித் சர்மாவே முடிவு செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ததாக நம்புகிறேன். அது போன்று ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் இறுதி முடிவு உள்ளது என்பதே உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.
- பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
- விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.
மும்பை:
இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
- ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார்.
- நவர்ரோ 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) இன்று காலை நடத்த 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 10 நிமிட நேரம் நடந்தது.
மற்றொரு ஆட்டத்தில் 8-வது வரிசையில் இருக்கும் எம்மா நவர்ரோ (அமெரிக்கா) முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான ஓனஸ் ஜபேர் (துனிசியா) மோதினார்கள். இதில் நவர்ரோ 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 3 நிமிட நேரம் தேவைப்பட்டது.
இன்னொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள டாரியா கசட்சினா-கஜகஸ்தானை சேர்ந்த யுலியா புதின்சேவா மோதினார்கள். இதில் கசட்சினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று வெற்றி பெற்றார். அவர் 4-வது சுற்றில் எம்மா நவர்ரோவை சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் மிச்சேல் சென் (அமெரிக்கா) 6-3, 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட் கணக்கில் 19-வது வரிசையில் உள்ள கச்சனோவ்வை (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.
- டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த ஏலத்தில் லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்சர் படேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை கருத்தில் கொண்டே டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது.
- ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25% அதிகமாகும்.
ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.
மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.
ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.






