என் மலர்
விளையாட்டு
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை உடன் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ரஹானே உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை
- சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்காதது மிகவும் கடினமானது. சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் சாம்சனை விட ரிஷப் பண்ட் ஆட்டங்களை அதிகமாக மாற்றும் தன்மை கொண்டவர். அதனால்தான் சாம்சன் இந்திய அணியில் இடம்பெறவில்லை" என்று தெரிவித்தார்.
- சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை
- சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆவேசமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு முன்கூட்டியே கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போது இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 56.66 சராசரி மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 212*, கடைசியாக தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியபோது சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இல்லை. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் ஈகோ பிரச்னையில் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்"
சஞ்சு சாம்சனை வெளியேற்றியதன் மூலம், விஜய் ஹசாரேவின் கால் இறுதிக்கு கூட கேரளா தகுதி பெறவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை..
- சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
- கேப்டன் ரோகித் சர்மா, அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதா தகவல்.
- தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என கம்பீர் விரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்க விரும்பியதால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்ததாகவும் இறுதியில் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் விருப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.
- கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 சீசன்களில் லக்னோ அணி கேப்டனாக கே.எல். ராகுல் பணியாற்றி வந்தார்.
இதில் 2022 மற்றும் 2023 சீசன்களில் லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. கடந்த சீசனில் லக்னோ அணி 7-வது இடத்தை பிடித்தது. இதையடுத்து 2025 சீசனில் கே.எல். ராகுல் லக்னோ அணியில் இருந்து வெளியேறினார்.
ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை அவர் பெற்றார். இந்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 2016-ம் ஆண்டு முதல் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2021-ல் இருந்து கேப்டனாக செயல்பட்டார். விபத்தில் ஏற்பட்ட காயத்தால் 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ள டெல்லி அணி முயற்சித்தது.
லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி அணி இதுவரை இந்த சீசனுக்கான கேப்டனை முடிவு செய்யவில்லை.
- குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
- முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன.
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கேல் ரத்னா விருதை பெற்றுக் கொண்ட குகேஷ் நேரடியாக ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். போட்டியின் முதல் சுற்று தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பு வந்த குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் 35-வது நகர்த்தலில் அனிஷ் கிரி தவறாக காய் நகர்த்த போட்டியின் நிலை தலைகீழாக மாறியது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் அப்துசட்டோரோ மோதினர். கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியனான சீனாவின் வெய் யி, முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் டிராவில் முடிந்தது.
இதே போல் முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன. லியோன் லூக் மென்டோன்கா மற்றும் வின்சென்ட் கீமர் இடையிலான போட்டியில் லியோன் லூக் வெற்றி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, உக்ரைனின் டயானா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சக நாடடு வீராங்கனை காலின்சை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 137 ரன்னில் சுருண்டது.
முல்தான்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. சாத் ஷகீல் 56 ரன்களுடனும், ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது.
தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். இதுவரை பாகிஸ்தான் 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- டெல்லியில் கோ கோ உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
- இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய பெண்கள் அணி 66-16 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தென் ஆப்பிரிக்காவை 62-42 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அமெரிக்காவின் மார்கஸ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே 6-7 (5-7), 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் மியோமிரை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் கோ-இசுதின் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.