என் மலர்
விளையாட்டு
- பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிஎஸ்கே அணி நிர்வாகமும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா. இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்சனா, தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்திகாவை திருமணம் செய்துக்கொண்டார்.
பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு சிஎஸ்கே அணி நிர்வாகமும், சிஎஸ்கே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த இவரை மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- பும்ரா தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது.
- சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை:
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க கடந்த 12-ம் தேக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், இந்திய அணியை அறிவிக்க ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. அதன்படி இன்று இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும், அவரது தேர்வு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குறைந்தபட்சம் ஒரு ஒருநாள் போட்டியில் அவர் இடம்பெறுவதை தேர்வுக் குழு ஆர்வமாக உள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7-0), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ராபர்டோவை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் ஜின்-காங் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-10, 21-17 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் கோ-இசுதின் ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வென்றது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, குரோசியாவின் இவான் டோடிக்-பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- இந்திய ஆண்கள் அணி இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- இந்திய பெண்கள் அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியுடன் மோதியது.
இதில் இந்திய ஆண்கள் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. இறுதியில், இந்திய ஆண்கள் அணி 100-40 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வங்கதேச அணியை 109-16 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
- ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை.
மும்பை:
இந்திய அளவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் விதர்பா அணியை முதல் முறையாக இறுதி போட்டிக்கு கேப்டன் கருண் நாயர் அழைத்துச் சென்று இருக்கிறார். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ரன் குவித்து வரும் கருண் நாயரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இந்தத் தொடரின் கால் இறுதி போட்டியிலும் சதம் அடித்த கருண் நாயர், அரை இறுதி போட்டியில் விதர்பா அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் 44 பந்துகளில் 88 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான அந்த அரை இறுதி போட்டியில் விதர்பா அணி 50 ஓவர்களில் 380 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் விதர்பா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் கருண் நாயரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், கருண் நாயர் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து, அதிலும் ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை. இதுபோன்ற செயல்பாடுகள் எதைச்சையாக நடக்காது. ஆழ்ந்த கவனம் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியம். வலுவாக இருங்கள். உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
என்று சச்சின் கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இத்தொடரில் விளையாடும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை காலை மும்பையில் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். கூட்டம் முடிந்து அணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 12:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் அணி 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், குடகேஷ் மோடி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முல்தான்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத்- முகமது ஹுரைரா களம் இறங்கினர். இதில் முகமது ஹுரைரா 6 ரன், ஷான் மசூத் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் 8, கம்ரான் குலாம் 5 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து சாத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 56 ரன்னுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், குடகேஷ் மோடி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்த போட்டியில் பொல்லார் 36 ரன்களை விளாசினார்.
- அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
துபாயில் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ்- எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார் 36 ரன்களையும், தொடக்க வீரர் குசல் பெரேரா 33 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஜமான் 52 பந்துகளில் 67 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்சர்களை நிறைவு செய்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் 2-வது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19-வது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:-
கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்சர்கள் (455 இன்னிங்ஸில்)
கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்சர்கள் (613 இன்னிங்ஸ்)
ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 727 சிக்சர்கள் (456 இன்னிங்ஸில்)
நிக்கோலஸ் புரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 592 சிக்சர்கள் (350 இன்னிங்ஸில்)
காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 550 சிக்சர்கள் (415 இன்னிங்ஸில்)
- ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது
இந்திய வீரர் ரிங்கு சிங், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸ்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு கெத்தாக இடம் பிடித்தவர் ரிங்கு சிங். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது
இந்நிலையில் ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப்ரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 500 ரன்களை எடுத்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






