என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை.
    • இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிகிறது. இந்த போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    இந்த தொடருக்கான அணியை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களுடைய அணியை அறிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடி காட்டி வரும் கருண் நாயர், இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கவில்லை. இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே தயாராக உள்ளது. அதில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

    என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

    • 6-2, 6-4, 3-7, 6-2 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்கராஸ்-போர்ச்சுகல்லின் நுனோ போர்ஹெஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-2 என்ற கணக்கில் வென்றார். 2-வது செட்டில் போர்ஹெஸ் கடுமையாக போராடி தோல்வியடைந்தார். 3-வது செட்டில் போர்ஹெஸ் வெற்றி பெற்றார். 4-வது செட்டில் எளிதாக அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் 6-2, 6-4, 3-7, 6-2 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 3-ம் சுற்றில் செக் குடியரசின் டோமாஸ் மச்சாக்குடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப்- லெய்லா அன்னி பெர்னாண்டஸ் (கனடா) ஆகியோர் மோதினர்.
    • இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் (அமெரிக்கா) மற்றும் லெய்லா அன்னி பெர்னாண்டஸ் (கனடா) ஆகியோர் மோதினர். இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் நவோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோர் மோதின. இதில் முதல் செட் ஆட்டம் பரபரப்பாக சென்றது. அப்போது ஒசாகா காயம் காரணமாக வெளியேறினார்.


    இதனால் பென்சிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்து சுற்றுக்கு பென்சிக் முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா-கிளாரா டவுசன் மோதினர்.
    • சபலென்கா 7-6(7-5), 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்)-கிளாரா டவுசன் (டென்மார்க்) மோதினர்.

    இதில் சபலென்கா 7-6(7-5), 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் குரோஷியாவின் டோனா வெக்கிச் 7-6 (7-4), 6-7 (3-7), 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டயானா ஷ்னைடரை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோகித் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
    • அவர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

    நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவை நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனால் இந்திய அணி குறித்தும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட்டில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை விட்டு கொடுத்தார். எத்தனை கேப்டன்கள் இதுபோல் செய்துள்ளனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இவரின் கேப்டன்சியில்தான் மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது.

    பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட்டில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை விட்டு கொடுத்தார். எத்தனை கேப்டன்கள் இதுபோல் செய்துள்ளனர்? ஒரு தொடர் அவர் யார் என்பதை முடிவு செய்து விடாது.

    என யுவராஜ் கூறினார்.

    • டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
    • ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன்.

    தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷ், சமீபத்தில் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது குகேஷ் கூறியதாவது:-

    ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும்பட்சத்தில் செஸ் சேர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

    செஸ், மிகவும் பிரபலத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை ஒலிம்பிக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனால் ஒலிம்பிக்கில் செஸ் சேர்க்கப்படுவதை உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன்.

    ஓரிரு நாட்களில் நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீயில் நடைபெறும் டாடா செஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    • 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
    • இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் குகேஷ்.

    2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர் மற்றும் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றஇந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (பஞ்சாப்), சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதில் 18 வயதாகும் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திசாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

    இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். அப்போது குகேஷ் மற்றும் மனுபாகருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 



    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
    • அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்து இருந்தது. தொடர் தோல்விகள் காரணமாக இந்திய அணி ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விதிமுறையும் அடங்கும். மிக அத்தியாவசியமான சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் பங்கேற்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கு முன்பாக நடந்த முகாமில் சஞ்சு சாம்சனால் பங்கேற்க முடியாததால் அவரை கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை.

    இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து தேர்வாளர்களும் வாரியமும் மிகத்தெளிவாக உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி பெறாமல் உள்நாட்டுப் போட்டிகளை தவற விட்டதற்காக இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.

    சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே போட்டியைத் தவறவிட்டதற்கான எந்த காரணத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்களுக்கு வழங்கவில்லை. அவர் துபாயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தேர்வு குழுவினர் ஒரு சரியான காரணத்தை விரும்புவார்கள். இல்லையென்றால் ஒருநாள் போட்டிக்கு அவரைப் பரிசீலினை செய்வது கடினமாக இருக்கும்.

    கேரள கிரிக்கெட் சங்கத்துடன் சாம்சனுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதை சரிசெய்ய வேண்டும். மாநில சங்கத்திற்கும் அவருக்கும் இடையே தவறான புரிதல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போர்ச்சுகலின் ஜெய்ம் பாரியா உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-1, 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகா உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் முதல் செட்டை இழந்த சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 5 வீரரும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேர்னர் டைன் உடன் மோதினார்.

    இதில் அமெரிக்க வீரர் 6-3, 7-6 (7-4) என முதல் இரு செட்களை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (10-8), 6-1 என போராடி வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அமெரிக்க வீரர் 7-6 (10-7) என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் அனுபவம் வாய்ந்தவரும், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளவருமானமெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    19 வயது ஆன அமெரிக்க வீரர் லேர்னர் டைன், மெத்வதேவ் இடையிலான போட்டி 4 மணி 49 நிமிடம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்றது பிசிசிஐ.
    • அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் என்றது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

    இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.

    இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது.

    இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    இனி இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.

    எந்தத் தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்லவேண்டும்.

    வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஏற்கனவே இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×