என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்சுவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா, மகாராஷ்டிரா அணிகள் மோதின.
    • இதில் விதர்பா அணி வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று 2வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்தது. யாஷ் ரதோட் 116 ரன்னும், துருவ் ஷோரே 114 ரன்னும் எடுத்தனர்.

    இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயர் 88 ரன்னும், ஜிதேஷ் சர்மா 51 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மகாராஷ்டிரா களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 90 ரன்னும், அன்கிட் பாவ்னே 50 ரன்னும் எடுத்தனர். நிகில் நாயக் 49 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது யாஷ் ரதோடுக்கு வழங்கப்பட்டது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன், இவர் இந்திய அணியில் இணையவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    நியூசிலாந்திடம் தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1-3 தோல்வி உட்பட மோசமான ஆட்டத்தால் இந்திய அணி மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதனையடுத்து இந்திய அணியில் பல மாற்றங்கள் வந்துள்ளது. சம்பளத்திலும் வீரர்களின் மனைவிகளை போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்வதிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

    அதன்படி பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணியில், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களான அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் போன்ற பயிற்சியாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 22-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன், இவர் இந்திய அணியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தொடர்களில் ஏமாற்றமான ஆட்டத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ புதிய சிறப்பு பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்வு செய்ததுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    52 வயதான சிதான்ஷு கோடக், சௌராஷ்டிராவின் முன்னாள் கேப்டனாக 130 போட்டிகளில் விளையாடி 8061 ரன்கள் எடுத்துள்ளார்.

    • டபிள்யூ.பி.எல். தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது.

    3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 1-ந் தேதி முடிகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடக்கிறது.

    போட்டி அட்டவணை:-

    பிப்ரவரி 14, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூரு வதோதரா

    பிப்ரவரி 15, 2025 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 16, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 17, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் - வதோதரா

    பிப்ரவரி 18, 2025 குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 19, 2025 யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் -வதோதரா

    பிப்ரவரி 21, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 22, 2025 டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - பெங்களூரு

    பிப்ரவரி 23, 2025 ஓய்வு நாள்

    24, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 26, 2025 மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்- பெங்களூரு

    பிப்ரவரி 27, 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்

    28 பிப்ரவரி 2025 டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

    1 மார்ச் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்

    • லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளதாக செய்திகள் பரவின.
    • இந்த செய்திக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

    8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி பாகிஸ்தானின் கராச்சியில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளதாக பல செய்திகள் பரவின. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வைரலானது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில் மைதான வேலைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாது என்றும் எனவே இந்த போட்டி பாகிஸ்தானில் இருந்து முழுமையாக நியூசிலாந்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இகா ஸ்வியாடெக் 6- 0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • 2-வது சுற்று ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி, மேடிசன் கீஸ் ஆகியோரும் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

    மெல்போர்ன்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் (போலந்து), ரெபெக்கா ஷ்ரம்கோவா (ஸ்லோவாக்) உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6- 0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு ஆட்டத்தில் டெஸ்டானி ஐயாவா (ஆஸ்திரேலியா) மற்றும் டேனியல் ரோஸ் காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இதில் 7-4, 4-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி, மேடிசன் கீஸ் ஆகியோரும் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.
    • காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.

    வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.

    இந்நிலையில் காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிகளுக்காக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற ரூ.71 லட்சம் பணத்தை வழங்கவுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் ப்ரிட்ஸ் தெரிவித்துள்ளார். என்னை வளர்த்த ஊருக்கு என்னால் இயன்றதை செய்வதாகவும், மக்களுக்கு உதவ பலர் முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்திய ஆண்கள் அணி 9 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.
    • இந்திய பெண்கள் அணி ஈரானை 100-16 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

    இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற கோ கோ உலகக் கோப்பை 2025 போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய அணி நேபாளம் மற்றும் பிரேசில் அணிகளை ஏற்கனவே வீழ்த்தியிருந்தது.

    இந்த மூன்று போட்டிகளிலும், இந்தியா கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. பெருவுக்கு எதிரான குரூப் ஏ போட்டியில், பிரதிக் வைக்கர் தலைமையிலான இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதல் சுற்றில் தாக்குதலைத் தேர்வு செய்தது. இந்திய தாக்குதல் வீரர்கள் 15 பெரு தடுப்பாட்ட வீரர்களை ஏழு நிமிடங்களில் வெளியேற்றினர்.

    முதல் சுற்றின் முடிவில், இந்தியா 36 புள்ளிகள் பெற்றது. இரண்டாவது சுற்றில், பெரு தாக்குதலைத் தொடங்கியது, ஆனால் இந்திய தடுப்பாட்ட வீரர்களின் சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் 16 புள்ளிகளை மட்டுமே பெற்றது. 2-வது சுற்றின் முடிவில், இந்தியா 36-16 என்ற புள்ளிக் கணக்கில் முதலிடத்தில் இருந்தது.

    3-வது சுற்றில், இந்தியா 34 புள்ளிகள் பெற்று மொத்தம் 70 புள்ளிகளைப் பெற்றது.4-வது சுற்றில், பெரு 22 புள்ளிகள் பெற்று மொத்தம் 38 புள்ளிகளைப் பெற்றது.

    2-வது பாதியின் முடிவில், இந்தியா 20 புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்து 32 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது சுற்றில் பெருவின் போராட்டம் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.

    தொடர்ச்சியான வெற்றிகளுடன், இந்தியா 6 புள்ளிகள் மற்றும் 68 புள்ளிகள் வித்தியாசத்தில் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

    முன்னதாக, இந்தியப் பெண்கள் அணி ஈரானை 100-16 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில், பிரியங்கா இங்கிள் தலைமையிலான பெண்கள் அணி 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளது. முன்னதாக தென் கொரியாவை 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தனர்.

    • ஆர்சிபி அணியில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் விலகியுள்ளார்.
    • அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் முழங்கால் காயம் காரணமாக வரும் சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது.
    • இதனால் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.

    சமீபத்தில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளைப் பரிசீலித்து வருகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் சுற்றுப்பயணங்களில் அவர்களுடன் இணைவதைத் தடை செய்வது உள்ளிட்ட மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்ணணையாளர் ஹர்சா போக்லே, கிரிக்கெட் வீரர்கள் பிஆர் நிறுவனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிசிசிஐ இந்திய அணிக்காக முன்மொழிவதைப் போல மாற்றங்களைப் படித்தேன். நான் எவ்வளவு நம்ப வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியினர் பிஆர் நிறுவனங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் ஒரு விதியை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

    என போக்லே கூறினார்.

    சுப்மன் கில் பிரபலமான பிஆர் நிறுவனமான கார்னர் ஸ்டோன்-ஐ நியமித்துள்ளார். விராட் கோலி, நவம்பர் 2024 இல் Sporting Beyond நிறுவனத்துடன் இணைந்திருந்தார். இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் பிளாக் ஹாட் டேலண்ட் சொல்யூஷன்ஸ் என்ற பிஆர் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறார்.

    அதே நேரத்தில் யஷஸ்வி ஜெயஸ்வால் மெராகி ஸ்போர்ட் கவனிப்பில் இருக்கிறார். ரைஸ் வேர்ல்ட் வைடு ரோகித், பும்ரா, திலக் வர்மா, ஷ்ரேயாஸ், சாய் சுதர்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்ட்யா போன்ற பல நட்சத்திர வீரர்களை நிர்வகிக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பொது இமேஜ் மற்றும் ஆதரவுகளை நிர்வகிக்க பிஆர் நிறுவனங்களை எவ்வளவு நம்பியிருக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
    • ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.

    இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    இதனால் கடும் விமர்சனங்கள் அவர்கள் மீது எழுந்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மீது பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் விலகினார். அந்த தொடர் முடிந்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர் ரோகித் சர்மா என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைதான் முன்னிலைப் படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர்.

    நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும் சமயங்களில் ஒரு நல்ல தலைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ரோகித் சர்மா தான் அந்த தலைவர்.

    என ஆகாஷ் தீப் கூறினார்.

    • லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
    • முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடருக்கான எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும், பி பரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இரண்டு பிரிவுகளிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா குணமடைய மார்ச் மாதம் ஆகும். இதனால், அவர் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

    ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கொண்டுவரலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்றும் புவனேஷ்வர் குமாரால் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது."

    "என்னை பொருத்தவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும்" என்றார்.

    ×