என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமலுக்குக் கொண்டுவர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்.
    • இந்த விதியை மீண்டும் கொண்டு வரலாம்.

    இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.-க்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், மீண்டும் பழைய விதிகளை அமலுக்குக் கொண்டுவர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி விராட் கோலி இந்திய அணி கேப்டனாக இருந்தபோது பின்பற்றப்பட்டு வந்த உடற்பயிற்சி சார்ந்த சோதனைகள் தொடர்பான விதிகளை மீண்டும் கொண்டுவர பி.சி.சி.ஐ. ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களின் பணிச்சுமை மற்றும் பயணம் சார்ந்த இன்னல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு கட்டாய யோ-யோ சோதனையை பி.சி.சி.ஐ. ரத்து செய்தது. ஆனால், இந்த விதியை மீண்டும் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் செய்தி குறிப்பில், "கடுமையான அட்டவணை காரணமாக காயம் ஏற்படுவதை தடுக்கும் முயற்சிகளை கைவிட்டு, தேர்வுக்கான உடற்பயிற்சி அளவுகோல்களுக்கு மீண்டும் திரும்புமாறு மருத்துவக் குழுவிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முந்தைய நிர்வாகத்தால் யோ-யோ சோதனை நீக்கப்பட்டது, ஆனால் இப்போது இந்த நடவடிக்கையில் மீண்டும் மாற்றம் செய்யப்படலாம்.

    "வீரர்கள் பெரும்பாலும் பயணங்களில் இருப்பதால், வாரியம் அவர்கள் மீது மென்மையாக நடந்து கொண்டது. காயம் ஏற்படுவதை தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. இது சில வீரர்களால் இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மெத்தனப் போக்கு வராமல் இருக்க குறிப்பிட்ட உடற்பயிற்சி நிலை அளவுகோல்களை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது," என்று தகவல்கள் தெரிவித்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    • மோசமான தோல்வியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
    • விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளை மீண்டும் அமல்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை இழந்தது.

    நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    இந்த மோசமான தோல்வியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக கூடுதலாக உள்ளூர் ஜாம்பவான்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக காம்பீர் உள்ளார். ரையன் டென் டோஸ்கேட், அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல், திலீப் ஆகியோரும் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளை மீண்டும் அமல்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    உடல் தகுதி, யோ யோ சோதனை உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகளை வீரர்களிடம் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை படோசா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், பிரிட்டனின் ஜோடி அன்னா உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனுடன் மோதினார். இதில் படோசா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சாம்பியன்ஸ் தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார்.

    கேப் டவுன்:

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது. தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், எதிர்கால நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜே திடீரென விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்-டிரிஸ்டன் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.

    • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
    • இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

    • இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளை படைத்துள்ளார்.
    • 87 பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி அதிகவேக சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 87 பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை மந்தனா முறியடித்துள்ளார்.

    ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதங்கள் அடித்த வீராங்கனைகள்

    70 ஸ்மிருதி மந்தனா vs அயர்லாந்து, 2025

    87 - ஹர்மன்ப்ரீத் கவுர் vs தென் ஆப்பிரிக்கா, 2024

    90 - ஹர்மன்ப்ரீத் கவுர் vs ஆஸ்திரேலியா, 2017

    90 ஜெமிமா ரோட்ரிக்ஸ் vs அயர்லாந்து, 2025

    98 - ஹர்லீன் தியோல் vs வெஸ்ட் இண்டீஸ், 2024

    மேலும் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 10 சதங்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.

    மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் வீராங்கனைகள்

    15- மெக் லானிங்

    13- சுசி பேட்ஸ்

    10- டாமி பியூமண்ட்

    10- ஸ்மிருதி மந்தனா

    9- சாமரி அதபத்து

    9 சார்லோட் எட்வர்ட்ஸ்

    9 நாட் ஸ்கைவர்-பிரண்ட்

    • அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. அதிக பட்சமாக தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாரா ஃபோர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    • அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.

    • ஸ்மிருதி மந்தனா 80 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பிரதிகா ராவல் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய மந்தனா அவ்வபோது சிக்சர்களை பறக்கவிட்டார்.அவர் 80 பந்தில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய பிரதிகா ராவலும் 129 பந்தில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா ஹோஷ் (59) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    • டெல்லி அணியில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் உறுதி செய்துள்ளார்.
    • மும்பை அணியுடன் இணைந்து ரோகித் சர்மா, வான்கடே மைதானத்தில் 2 மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோகித், விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது.

    இதனையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

    ரோகித் சர்மா ரஞ்சி டிராபியின் இரண்டாம் கட்டப் பயிற்சிக்கு முன்னதாக மும்பை அணியுடன் இணைந்து வான்கடே மைதானத்தில் 2 மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.

    வருகிற 23-ந் தேதி ரஞ்சி டிராபி மீண்டும் தொடங்குகிறது. மும்பை அணிக்காக 2015-ம் ஆண்டில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக போட்டியில் ரோகித் சர்மா விளையாடி இருந்தார். மும்பை அணியின் அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதே போல விராட் கோலி, சுப்மன்கில், ரிஷப்பண்ட் ஆகியோரும் ரஞ்சி டிராபியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணியில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரொஹன் ஜெட்லி, "டெல்லியின் அடுத்த ரஞ்சி டிராபி போட்டியான சவுராஷ்டிராவுக்கு எதிராக ரிஷப் பண்ட் விளையாட உள்ளதாக உறுதி செய்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

    அதேசமயம் விராட் கோலியும் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
    • தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதேசமயம் 6 அணிகள் அறிவிக்கபட்ட நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போதுவரை அறிவிக்கபடவில்லை. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய அணி கேப்டன் பாகிஸ்தான் செல்லவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு மெகா சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், பிசிபி பிரமாண்டமான நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

    ×