என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது.
    • ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.

    ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    தோல்விக்கு முக்கிய காரணமாக சென்னை அணி பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதனால் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி களமிறங்கி உள்ளார். அவர் 3 போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. மொத்தமாக 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக ஆடவில்லை. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை Mid-Season Trials-காக சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது.

    எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார்.
    • நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

    பெங்களூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத் அணிக்காக முதல் முறையாக விளையாடிய சிராஜ் குஜராத் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சால்ட் ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து விராட் கோலி ஸ்ட்ரைக்கு வந்தார். அவருக்கு எதிராக பந்து வீச ஓடி வந்த சிராஜ், பாதி வழியில் பந்து வீச முடியாமல் திரும்பினார். அப்போது சிராஜ் கையை அசைத்து மன்னித்து விடுங்கள் என்பது போல சைகை காட்ட பதிலுக்கு விராட் பரவாயில்லை என்பது போல சைகை காட்டினார். இருவரது முகத்திலும் ஒருவிதமான அன்பு வெளிப்பட்டது.

    இந்த உணர்ச்சிவசமான சம்பவத்தை ஆர்சிபி ரசிகர்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். ஏனென்றால் நான் ஆர்சிபிக்காக 7 ஆண்டுகள் விளையாடிருக்கின்றேன். இதன் காரணமாக இன்று ஆட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என போட்டிக்கு பிறகு சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    7 ஆண்டுகளாக ஆசிபி அணிக்காக விளையாடி சிராஜ்-ஐ ஆர்சிபி அணி தக்க வைக்காமல் அணியை விட்டு நீக்கியது. இதனால் கடுப்பான சிராஜ் தற்போது ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்தினார் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

    தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல தன்னால் முடிந்ததை அவர் செய்தார் என்றும் பலர் கூறினர். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கலாம் எனவும் அவரது அணி வெற்றி பெற அவர் உழைத்தார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரிஸ்வான் 27 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்த போட்டியிலும் நியூசிலாந்து அனி எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியில் பாகிஸ்தான் அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் 27 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்களின் பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வீடியோ வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

    அந்த வீடியோவிற்கு பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வானின் நடனமாடும் வீடியோ என தலைப்பிட்டுள்ளார்.அவர் கூறுவது போல ரிஸ்வான் பேட்டிங் செய்தவதற்கு பதிலாக டான்ஸ் தான் ஆடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியது.

    அதனையடுத்து அவர் களநடுவராக வந்தாலே இந்தியா தோல்வியை சந்திக்கும் என்ற அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு நடுவர் ரிச்சர்ட் வந்தும் இந்தியா வெற்றி பெற ஆரம்பித்து விட்டதால் அவர் குறித்து செய்திகள் வருவது குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் புவனேஸ்வர்குமார் 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • இதன் மூலம் ப்ராவோ மற்றும் அஸ்வின் சாதனையை புவனேஸ்வர்குமார் சமன் செய்தார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    இந்த போட்டியில் ஆர்சிபி அணி வீரர் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடர்

    வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ப்ராவோ, அஸ்வின் சாதனையை புவனேஸ்வர் குமார் சமன் செய்தார்.

    ப்ராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் புவனேஸ்வர்குமார் 178 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் சாஹல் (206) முதல் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:-

    யுஸ்வேந்திர சாஹல்- 206 விக்கெட்டுகள்

    பியூஸ் சாவ்லா - 192 விக்கெட்டுகள்

    அஸ்வின் - 183 விக்கெட்டுகள்

    புவனேஸ்வர் குமார் - 183 விக்கெட்டுகள்

    ப்ராவோ - 183 விக்கெட்டுகள்

    • பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது.
    • இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    பெங்களூரு:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.

    லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 21 பந்தில் 33 ரன்னும் (5 பவுண் டரி, 1 சிக்சர்), டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய்கிஷோர் 2 விக்கெட்டும், அர்ஷத்கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 170 ரன் இலக்கை 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோஸ் பட்லர் 39 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 36 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர் போர்டு 18 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், ஹாசல்ஹவுட்டுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன்கில் கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டுகிறேன். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது. இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.

    இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுக்கலாம்.அதே நேரத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றலாம். 7 முதல் 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கைக் கொடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி பெற முடிந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக அமைந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறும்போது, '20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.

    குஜராத் அணி 4 போட்டி யில் ஐதராபாத்தை 6-ந்தேதி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தில் மும்பையை 7-ந்தேதி சந்திக்கிறது.

    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

    10-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.

    கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் வெற்றிக்கு வித்திட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 2) இந்தியா உலகக் கோப்பையை ருசித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்த உலகக் கோப்பையில் ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. எம்.எஸ். தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியிலேயே டாஸை வென்றதாக நினைத்தனர்.

    சங்கக்காராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப்போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

    • கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக சுழற்பந்து வீச்சு பார்க்கப்படுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

    ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது.

    மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 116 ரன்னில் சுருண்டது. ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பியது. அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் ஆகியோரின் தடுமாற்றமான பேட்டிங் பின்னடைவாக அமைந்துள்ளது. இதேபோல் பந்து வீச்சில் ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணாவின் வேகப்பந்து வீச்சு நிலையற்றதாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா முதுகு வலி பிரச்சினையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

    கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக சுழற்பந்து வீச்சு பார்க்கப்படுகிறது. சுழலுக்கு சாதகமான ஈடன் கார்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் ஆட்டங்களுக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சூழ்நிலையை பயன்படுத்தி கொல்கத்தா அணி எழுச்சி பெற முயற்சிக்கும்.

    ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன் குவித்து மலைக்க வைத்ததுடன் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் முறையே 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும் தோல்வியை தழுவியது. அந்த இரு ஆட்டங்களிலும் 190, 163 ரன்களே எடுத்தது. அந்த அணியின் பலமான அதிரடி பேட்டிங் சரியாக 'கிளிக்' ஆகாதது கடந்த 2 ஆட்டங்களிலும் தோல்விக்கு வழிவகுத்தது. இதனால் அவர்கள் தங்களது வியூகத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, ஹென்ரிக் கிளாசென் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், ஜீஷன் அன்சாரி வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் தோற்று கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இது நல்ல வாய்ப்பாகும். இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் கொல்கத்தாவும், 9-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்ரவர்த்தி.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
    • 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ். 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:

    நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் 7 வருடங்கள் இங்கு இருந்தேன். ஜெர்சியை சிவப்பு நிறத்தில் இருந்து நீலமாக மாற்றினேன். உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் பந்து கிடைத்ததும் எனக்கு நன்றாக இருந்தது. நான் ரொனால்டோவின் ரசிகன், அதனால் கொண்டாட்டம்.

    நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என் தவறுகளை சரிசெய்து, என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஷ் பாயிடம் பேசினேன். நெஹ்ரா எனது பந்துவீச்சை அனுபவிக்கச் சொல்கிறார். இஷாந்த் பாய் என்ன லைன் அண்ட் லென்த் பந்து வீசவேண்டும் என்று சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பிட்ச் எனக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.

    லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.

    • ஆர்சிபி 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
    • லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும் அடித்தனர்.

    ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷத் கான் வீசிய பந்து லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி 13 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது

    அடுத்து பில் சால்ட் உடன் ரஜத் பட்டிதார் களம் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார்.

    பில் சால்ட் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய நிலையிலும் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94-க்கு 5 என ஆகியது. சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    7-ஆவது விக்கெட்டுக்கு லிவிங்ஸ்டன் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்த போதிலும் குஜராத் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    ஆர்சிபி 17 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்தது. 18-ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.

    19-ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் முகமது சிராஜ் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 16 ரன்கள் விளாசிய டிம் டேவிட் கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று வடிவிலான தொடரிலும் விளையாடுகிறது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    முதலில் வெஸ்ட் இண்டீஸ் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் நவம்பர் 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 தொடர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது.

    • ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • சொந்த மைதானமான சின்னசாமியில் முதன்முறையாக விளையாடுகிறது.

    ஐபிஎல் 2025 சீசனின் 14-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி விவரம்:-

    பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால்.

    குஜராத் டைட்டன்ஸ்:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

    ×