என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: அஸ்வின், ப்ராவோ சாதனையை சமன் செய்த புவனேஸ்வர் குமார்
- குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் புவனேஸ்வர்குமார் 1 விக்கெட் வீழ்த்தினார்.
- இதன் மூலம் ப்ராவோ மற்றும் அஸ்வின் சாதனையை புவனேஸ்வர்குமார் சமன் செய்தார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி வீரர் புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடர்
வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ப்ராவோ, அஸ்வின் சாதனையை புவனேஸ்வர் குமார் சமன் செய்தார்.
ப்ராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் புவனேஸ்வர்குமார் 178 போட்டிகளில் 183 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் சாஹல் (206) முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:-
யுஸ்வேந்திர சாஹல்- 206 விக்கெட்டுகள்
பியூஸ் சாவ்லா - 192 விக்கெட்டுகள்
அஸ்வின் - 183 விக்கெட்டுகள்
புவனேஸ்வர் குமார் - 183 விக்கெட்டுகள்
ப்ராவோ - 183 விக்கெட்டுகள்






