என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: லிவிங்ஸ்டன் அரைசதம்- குஜராத் டைட்டன்ஸ்க்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி
- ஆர்சிபி 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும் அடித்தனர்.
ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷத் கான் வீசிய பந்து லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி 13 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது
அடுத்து பில் சால்ட் உடன் ரஜத் பட்டிதார் களம் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார்.
பில் சால்ட் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய நிலையிலும் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94-க்கு 5 என ஆகியது. சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
7-ஆவது விக்கெட்டுக்கு லிவிங்ஸ்டன் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்த போதிலும் குஜராத் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஆர்சிபி 17 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்தது. 18-ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.
19-ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் முகமது சிராஜ் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 16 ரன்கள் விளாசிய டிம் டேவிட் கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.






