என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
    • நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆதரவு அளித்துள்ளார்.

    இலங்கை வீரரான மதீஷா பத்திரனா, ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் காரணமாக "பேபி மலிங்கா" என்று அழைக்கப்படுகிறார். தோனி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் பல இளம் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

    அந்த வகையில் பத்திரனாவை ஊக்குவித்து வழிநடத்தியவர். அவர் சிஎஸ்கே அணிக்கு அறிமுகமானதில் இருந்து அவருக்கு அதிகமான ஆதரவை தோனி கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நான் தோனியை என் கிரிக்கெட் அப்பாவாக நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோனி என் தந்தையைப் போன்றவர். ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு அளிக்கும் ஆதரவு, வழிகாட்டுதல் எல்லாம் என் தந்தை என் வீட்டுல செஞ்சதைப் போலவே இருக்கு. அதனாலதான் நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.

    என்று பத்திரனா கூறினார்.

    • மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது.
    • வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அடக்கியது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 172 ரன் இலக்கை பஞ்சாப் அணி 16.2 ஓவரில் எளிதாக எட்டிப்பிடித்தது.

    இந்த தோல்வியை தொடர்ந்து ஆடுகளத்தின் தன்மை குறித்து புகார் கிளம்பியது. 'இந்த ஆடுகளத்தை உருவாக்கிய ஊழியர்கள் இது லக்னோ அணியின் சொந்த மைதானம் என்பதை மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உள்ளூர் அணிக்கான அனுகூலமான சூழல் எதுவுமில்லை. பஞ்சாப் பிட்ச் பராமரிப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்தது போல் இருந்தது' என்று லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர்கான் கூறியிருந்தார். இதனால் இந்த ஆட்டத்துக்கு உள்ளூர் அணிக்கு கைகொடுக்கும் வகையிலான ஆடுகளம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (189 ரன்), மிட்செல் மார்ஷ் (124) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 0, 15, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட அவர் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி நம்பிக்கை அளித்தாலும் இன்னும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முழு உடல் தகுதியை எட்டியதால் லக்னோ அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. அவரது வருகை அந்த அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

    மும்பை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும், 36 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடமும் உதை வாங்கியது. மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 116 ரன்னில் சுருட்டிய மும்பை அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    முந்தைய ஆட்டத்தில் மும்பை அணியில் பேட்டிங்கில் ரிக்கெல்டன் (62 ரன்), சூர்யகுமார் (27 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அசத்தினர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆட்டங்களில் 0, 8, 13 என்று சொற்ப ரன்களில் வெளியேறிய அவர் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். பந்து வீச்சில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பும்ரா இல்லாத குறையை போக்கும் வகையில் அவர் தொடர்ந்து ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் பந்து வீச்சில் வலு சேர்க்கிறார்கள்.

    வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு உள்ளூரில் முதல் வெற்றியை ருசிக்க லக்னோ அணி எல்லா வகையிலும் முயலும். இரு அணிகளும் இரண்டாவது வெற்றிக்கு குறிவைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய்,

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர் அல்லது முஜீப் ரகுமான்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது.
    • இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

    ஐ.பி.எல். வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன் அந்த அணி கடந்த ஆண்டு சென்னைக்கு எதிராக 78 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்ததே இந்த வகையில் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

    ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று 29-வது முறையாக மோதிய கொல்கத்தா அணி 20-வது வெற்றியை பெற்றது.

    இதேபோல் பஞ்சாப்புக்கு எதிராக 21 ஆட்டத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 20 ஆட்டத்திலும் கொல்கத்தா அணி ஏற்கனவே வென்றுள்ளது.

    இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 20 மற்றும் அதற்கு அதிகமான ஆட்டங்களில் வென்ற முதல் அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றது.

    • முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 200 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 120 ரன்களில் சுருண்டது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

    வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் 60 ரன்னும், ரகுவன்ஷி 32 பந்தில் 50 ரன்னும் குவித்தனர். ரகானே 38 ரன்னும், ரிங்கு சிங் 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கிளாசன் 33 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஐதராபாத் 16.4 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கொல்கத்தா பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஐதராபாத் அணி பெற்ற 3-வது தோல்வி ஆகும்.

    கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டும், ஆண்ட்ரூ ரசல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • இதில் செக் குடியரசைச் சேர்ந்த மென்சிக் விலகியுள்ளார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாகுப் மென்சிக் மான்டே கார்லோ டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

    வரும் தொடர்களில் பங்கேற்க உள்ளதால் தற்போது ஓய்வு எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    இவர் கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெங்கடேஷ் அய்யர் 29 பந்தில் 60 ரன்கள் குவித்தார்.
    • ரிங்கு சிங் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 15-ஆவது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் பேட் கமின்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரைன் ஏழு ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அடுத்து 3-ஆவது ரகானே உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 11 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது ரகானே 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ரகுவன்ஷி 30 பந்தில் அரை சதம் அடித்தார். அரை சதம் அடித்த கையோடு 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது கொல்கத்தா 12.4 ஓவரில் 16 ரன்கள் எடுத்திருந்தது.

    5-ஆவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் ஐயருடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை தொடங்கியது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது

    ஹர்சல் படேல் வீசிய 17 வது ஓவரில் ரிங்கு சிங் 3 பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரை சிமர்ஜீத் சிங் வீசினார். இந்த ஓவரில் வெங்கடேஷ் ஐயர் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். கடைசி பந்தை ரிங்கு சிங் சிக்ஸருக்கு தூக்கினார் இதனால் இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன.

     19ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், 2ஆவது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். வெங்கடேஷ் அய்யர். அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தில் 2 ரன் எடுத்து, 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 21 ரன்கள் அடித்தது. இதனால் 19 ஓவரில் 187 ரன்கள் குவித்தது.

    கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் வெங்கடேஷ் அய்யர். 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் 29 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார். அடுதது ரசல் களம் இறங்கினார். ரிங்கு சிங்- வெங்கடேஷ் அய்யர் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 91 ரன்கள் குவித்தது.

    கடைசி 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்துள்ளது.

    • பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆர்சிபிக்கு எதிராக நேற்று விளையாடவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.

    ரபாடா குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிராக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சிபி-க்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.

    ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் களம் இறங்கினார். இவர் விராட் கோலியை வீழ்த்தினார்.

    குஜராத் அணியில் கோயட்சே, கிளென் பிளிப்ஸ் ஆகியோர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர். கோயட்சே இன்னும் முழுத்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 15ஆவது போட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி:-

    டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், ரகுவன்ஷி, மொயீன் அலி, சுனில் நரைன், ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ராணா, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ், சிம்ரஜீத் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது சமி, ஜீஷன் அன்சாரி.

    • என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
    • இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.

    என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.

    என சேவாக் கூறினார்.

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது.
    • 12-வது ஓவரில் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 39 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆர்சிபி வீரர் விராட் கோலி பீல்டிங் செய்யும் போது கையில் காயம் ஏற்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 12-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பந்து தாக்கியதில் விராட் கோலி விரலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.

    இதனையடுத்து ஆர்சிபி அணியின் பிசியோ உடனடியாக வந்து வலி நிவாரண சிகிச்சை செய்தனர். விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின.

    இந்நிலையில், கோலியின் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் முக்கிய அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.

    அதில் 'விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
    • குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுதர்சன் 186 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 62 சராசரி 158 ஸ்ட்ரைக்-ரேட்டும் அந்த ரன்களை எடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடினமான சூழ்நிலைகள் தான் எனது டி20 பேட்டிங் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என குஜராத் அணியின் தொடக்க வீரரும் தமிழக வீரருமான சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் இது எனது 4-ம் ஆண்டு. எனவே இது எனக்கு நிறைய அனுபவத்தை அளித்ததாக உணர்கிறேன். சில கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டேன். குஜராத் அணியுடன் வலை பயிற்சியில் நிறைய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டேன்.

    எனது வளர்ச்சிக்கு அல்லது எனது டி20 பேட்டிங்கை மேம்படுத்திய விதத்திற்கு மிக முக்கியமான காரணமாக குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள், சர்வதேச பந்து வீச்சாளர்களுடன் நான் இங்கு பெறும் விளையாட்டு நேரமும் பயிற்சி நேரமும் தான் என்று நான் நினைக்கிறேன். எனவே, வலை பயிற்சியில் இருந்து கூட அது எனக்கு உதவியது என்று நான் கூறுவேன்.

    இந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இது ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும், ஆட்டத்தின் அடிப்படைகளையும் புரிந்துகொள்ளவும் எனக்கு உதவியது என்று நான் நினைக்கிறேன்.

    பட்லர் நிறைய அனுபவத்தையும் நிறைய அறிவையும் கொண்டு வருகிறார் என்று நான் நினைக்கிறேன். இது மிடில் ஓவர்களை சரிசெய்யவும், கடைசி ஐந்து ஓவர்களை மிகச் சிறப்பாக விளையாடவும் எங்களுக்கு உதவுகிறது.

    என்று சுதர்சன் கூறினார்.

    • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தது.
    • இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது முதல் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அடுத்த விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    இதன் மூலம் விக்கெட்டுகள் அடிப்படையில் குஜராத் தங்களது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் 2023-ல் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணியின் முதல் பெரிய வெற்றியாகும்.

    மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த வருடத்தில் முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்வியையும் சேர்த்து தங்களது சொந்த மைதானமானத்தில் 44-வது தோல்வியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது.

    இதற்கு முன் டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

    ×