என் மலர்
விளையாட்டு
- ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினார்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியிலிருந்து விலகுகிறார்.
இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வந்தவர். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதலை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார்.
அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
- பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது.
- பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது என ஜாகீர் கான் கூறினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளரே காரணம் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த விவகாரம் ஐபிஎல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.
பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
என ஜாகீர் கான் கூறியுள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மிட்செல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் நசீம் ஷா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
ஃபஹீம் அஷ்ரஃப் 73 ரன்னிலும் நசீம் ஷா 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
- பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
- இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 17 ரன்களே எடுத்து உள்ளார்.
லக்னோ:
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையில் ரிஷப்பண்ட் உள்ளார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. கடந்த காலங்களில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.
ஆனால் ரிஷப்பண்டின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ரூ.27 கோடிக்கான மதிப்பில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து அவர் 17 ரன்களே எடுத்து உள்ளார். சராசரி 5.66 ஆகும். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், ஐதராபாத்துக்கு எதிராக 15 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார். நேற்றைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப்பண்டுடன் உரையாற்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. தோல்வி தொடர்பாக அவர் ரிஷப்பண்டை கேள்வி கேட்பது போல் உள்ளது. மேலும் ரிஷப் பண்டை நோக்கி விரலை நீட்டியது கூட காணப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் சஞ்சீவ் கோயங்கா விமர்சிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனின் போது அவர் கேப்டனாக பணியாற்றிய கே.எல். ராகுல் மீதும் தோல்வி தொடர்பாக கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ராகுல் அந்த அணியில் இருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே நிலைமை ரிஷப்பண்டுக்கு உருவாகிறது.
- 32 வயதான வந்தனா 320 சர்வதேச போட்டிகளில் விளையாடி 158 கோல்கள் அடித்துள்ளார்.
- இந்திய பெண்கள் ஹாக்கி வரலாற்றில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சிறப்புக்குரியவர்.
புதுடெல்லி:
இந்திய ஹாக்கி அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த வந்தனா கட்டாரியா சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 32 வயதான வந்தனா இதுவரை 320 சர்வதேச போட்டிகளில் விளையாடி 158 கோல்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி வரலாற்றில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சிறப்புக்குரியவர்.
முன்கள வீராங்கனையான வந்தனா 2009-ம் ஆண்டு சர்வதேச ஹாக்கியில் அறிமுகம் ஆனார். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட போதிலும், சிறந்த நிலையாக 4-வது இடத்தை பிடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல் அடித்து சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' கோல் போட்ட ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.
2016-ம் ஆண்டு வந்தனா தலைமையிலான இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மகுடம் சூடியது. 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தார். காமன்வெல்த், உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் புரோ ஹாக்கி லீக்கில் களம் கண்டார். அவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ரோஷ்னாபாத்தை சேர்ந்த வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இன்றுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து விடைபெறுகிறேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். எனக்கு பக்கபலமாக இருந்த சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் ரசிகர் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு, திரில்லிங்கான கோல்கள், பெருமைக்குரிய இந்திய அணியின் சீருடை அணிந்தது எல்லாமே எப்போதும் எனது நினைவில் எதிரொலிக்கும். ஒலிம்பிக் சிறப்பு வாய்ந்தது. அதிலும் 'ஹாட்ரிக்' கோல் அடித்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மோதல், எனது வாழ்வில் மிகவும் உணர்வுபூர்வமான ஆட்டங்களில் ஒன்றாகும்.
இத்துடன் எனது ஹாக்கி வாழ்க்கை முடிந்து விடப்போவதில்லை. நான் சர்வதேச போட்டியில் இருந்து மட்டுமே ஒதுங்குகிறேன். மற்றபடி தொடர்ந்து இந்திய பெண்கள் ஹாக்கி லீக்கில் விளையாடுவேன். கோல் அடிப்பேன். உத்வேகம் அளிப்பேன். ஹாக்கி விளையாட்டு மீதான ஆர்வம் எனக்குள் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
வந்தனாவுக்கு புகழாரம் சூட்டியுள்ள ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'வந்தனா வெறும் கோல் அடிப்பவர் மட்டுமல்ல. இந்திய தாக்குதல் ஆட்டத்தின் இதயதுடிப்பாக இருந்தார். கடின உழைப்பாளி. மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஒரு தலைவர். இந்திய அணியின் முன்கள வரிசையில் குறிப்பாக அழுத்தமான சூழலில் முக்கிய பங்களிப்பை வழங்கி, உலக அரங்கில் அணியின் எழுச்சிக்கு வித்திட்டவர். அத்துடன் இந்திய ஹாக்கியில் ஒரு தரத்தை வருங்கால சந்ததியினருக்கு நிர்ணயித்துள்ளார்' என்றார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வருகிற 5-ந் தேதி சேப்பாக்கத்தில் மோதுகிறது.
- www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 5-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமும் 1 டிமெரிட் பள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 4 - 7 டிமெரிட் புள்ளிகள் பெற்றப்பட்டால் ஒரு போட்டியில் அந்த வீரர் விளையாட முடியாது என்பது விதிமுறையாகும்.
- லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
- பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேனோ என்று பதட்டமாக இருந்தது என பண்ட் கூறியிருந்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ரிஷப் பண்ட், "எனக்கு ஒரே ஒரு பதற்றமாக இருந்தது, அது பஞ்சாப் அணியிடம் அதிகமான ஏலத்தொகை இருந்தது. ஷ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு சென்றால், நான் லக்னோ அணியால் எடுக்கப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் ஏலத்தில் உங்களுக்குத் தெரியாது. அதனால் ஏலத்தை பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவிய பின்னர், ரிஷப் பண்டை கிண்டல் செய்யும் விதமாக "ஏலத்திலேயே பதற்றம் முடிவுக்கு வந்தது" என்று பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.
- பஞ்சாப் வீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- ரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தீவின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸ் அடித்த பிறகு 'நோட்புக்' கொண்டாட்டத்தில் விராட் கோலி ஈடுபட்டார்.
விராட் கோலியின் 'நோட்புக்' கொண்டாட்டத்தை திக்வேஷ் செய்தது இணையத்தில் வைரலானது.
- பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அமர்க்களமான தொடக்கம் கண்டுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை துவம்சம் செய்தது. அடுத்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து 'கெத்து' காட்டியிருக்கும் பெங்களூரு அணி சொந்த ஊரில் களம் காணும் முதல் ஆட்டத்திலும் தனது உத்வேகத்தை தொடர்ந்து 'ஹாட்ரிக்' வெற்றியை தன்வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதாரும், பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார், யாஷ் தயாள், குருணல் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் 196 ரன்கள் எடுத்த குஜராத் அணி 160 ரன்னில் மும்பையை முடக்கியது.
2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ்பட்லர், ரூதர்போர்டு ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இரு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார். பந்து வீச்சில் முகமது சிராஜ், கசிசோ ரபடா, ரஷித் கான், சாய் கிஷோர் மிரட்டக்கூடியவர்கள்.
சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவானது என்பதால் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் திவேதியா, ரஷித் கான், ரபடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இதில் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார். பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.

20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நிக்கோலஸ் பூரன் 44 ரன்னும், படோனி 41 ரன்களும் சேர்த்தனர்.
- அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். மார்கிராம் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இருந்தாலும் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார்.
இதனால் லக்னோ 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. வாய்ப்பு கிடைக்கும்போது பூரன் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த மில்லர் 19 பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் படோனி உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாட லக்னோ அணி 150 ரன்னைக் கடந்தது. அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் லக்னோ 20 ரன்கள் விளாசியது.
யான்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-ஆவது பந்தில் படோனி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
4-ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். இவர் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் ஒரு வைடு உடன் 3 ரன்கள் அடிக்க இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சன், சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






