search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உற்சாகத்தில் அர்ஜென்டினா வீராங்கனைகள்
    X
    உற்சாகத்தில் அர்ஜென்டினா வீராங்கனைகள்

    டோக்கியோ ஒலிம்பிக்- அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஏமாற்றம்

    இந்திய மகளிர் ஹாக்கி அணி, காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது.

    ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணி வீராங்கனைகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அதன்பின்னர் அர்ஜென்டினா தரப்பில் 36வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை மரியா கோலாக்கினார். இதற்கு பதிலடி கொடுத்து சமன் செய்வதற்காக இந்திய வீராங்கனைகள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

    எனினும், இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×