
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘வருங்கால உலகக்கோப்பைக்கான அணியை நாங்கள் உருவாக்குவதற்காக பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருக்க முடியாது. அதேபோல் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கும் விருந்து படைக்க வேண்டும்.
நான் உலகளவில் நடைபெற்ற பெரும்பாலான டி20 லீக்கில் விளையாடியுள்ளேன். அந்த அனுபவம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட கைக்கொடுக்கும் என நம்புகிறேன். கேப்டனாக என்னுடைய தற்போதைய குறுகிய கால குறிக்கோள் 2020 உலகக்கோப்பைதான்’’ என்றார்.
பொல்லார்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக 2016-ம் ஆண்டு விளையாடிள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் 115 ரன்கள் சேர்த்தார்.