என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டெஸ்டிலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு - வெஸ்ட் இண்டீசுக்கு 468 ரன் இலக்கு
Byமாலை மலர்2 Sep 2019 10:09 AM GMT (Updated: 2 Sep 2019 10:09 AM GMT)
2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்திய அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
கிங்ஸ்டன்:
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. விகாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும் எடுத்தனர். ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி மேலும் 30 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது.
ஹெட்மயர் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். பும்ரா ஹாட்ரிக் சாதனையுடன் 27 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமிக்கு 2 விக்கெட்டும், ஜடேஜாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.
299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.
57 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ரன்னிலும், ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ரோச் பந்தில் வெளியேறினார்கள். புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார்.
5-வது விக்கெட்டான ரகானே - விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. விகாரி 67 பந்தில் 8 பவுண்டரியுடன் 50 ரன்னையும், ரகானே 91 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னையும் தொட்டனர்.
ரகானே 19-வது அரை சதத்தையும், விகாரி 3-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.
இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்த போது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 468 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ரகானே 109 பந்தில் 64 ரன்னும், (8 பவுண்டரி, 1 சிக்சர்), விகாரி 76 பந்தில் 53 ரன்னும் (8பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும் ஹோல்டர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
468 ரன் இலக்குடன் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 37 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர். பிராத்வெயிட் 3 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும், கேம்ப்பெல் 16 ரன்னில் முகமது ஷமி பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. பிராவோ 18 ரன்னிலும், புரூக்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு மேலும் 423 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது. இது கடினமான ஒன்றாகும்.
இதனால் இந்த டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுகிறது.
இந்த டெஸ்டிலும் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் 120 புள்ளிகளை பெறும்.

Next Story
×