search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X
    ஜேம்ஸ் ஆண்டர்சன்

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்: கிரேக் ஓவர்ட்டன் சேர்ப்பு

    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் கடந்த 1-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. ஏற்கனவே காயத்தால் (Half Injury) அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் இடம்பிடித்தார்.

    ஆனால் நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் அதே இடத்தில் காயம் ஏற்பட்டதால் அத்துடன் வெளியேறினார். 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.

    ஓல்டு டிராபோர்டில் அடுத்த மாதம் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாடுவதற்காக தயாராகி வந்தார். இந்நிலையில் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதனால் அவருக்குப் பதிலாக கிரேக் ஓவர்ட்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஸ்விங் பந்தால் அச்சுறுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான்கு ஓவரோடு ஆஷஸ் தொடர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு துரதிருஷ்டவசமாக முடிவுக்கு வந்துள்ளது.
    Next Story
    ×