search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி களிப்பில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியினர்
    X
    வெற்றி களிப்பில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியினர்

    புரோ கபடி - குஜராத் பார்ச்சுன் ஜெய்ண்ட்சை வீழ்த்தியது அரியானா ஸ்டீலர்ஸ்

    டெல்லியில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.
    புதுடெல்லி:

    புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அரியனா அணி வீரர்கள் அபாரமாக ஆடி புள்ளிகளை எடுத்தனர். குஜராத் அணி புள்ளிகை எடுக்க கடுமையாக போராடியது.

    இறுதியில், அரியானா ஸ்டீலர்ஸ் 41 - 25 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

    மற்றொரு போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்திய தபாங் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
    Next Story
    ×