search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ்
    X
    பென் ஸ்டோக்ஸ்

    டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தின் சிறந்த சேசிங்

    டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இங்கிலாந்து அணியின் சிறந்த சேசிங் ஆகும்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

    இங்கிலாந்து அணிக்கு 359 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இமால இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து அணி 286 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பென் ஸ்டோக்ஸ்-ன் அதிரடியால் இங்கிலாந்து அணி 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 219 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 135 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான். இதற்கு முன்பு 1928-29-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 332 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச சேசிங்காக இருந்தது. டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 4-வது நிகழ்வாகும்.
    Next Story
    ×