search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காம்பீர் ஷுப்மான் கில்
    X
    காம்பீர் ஷுப்மான் கில்

    இளம் வயதில் இரட்டை சதம்: கவுதம் காம்பீர் சாதனையை முறியடித்தார் ஷுப்மான கில்

    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் வீரர் ஷுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வமற்ற -3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 201 ரன்களும், வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 8 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த தடுமாரிய நிலையில் ஷுப்மான் கில்,  ஹனுமா விஹாரி கூட்டணி அணியை சரிவில் இருந்தது.

    அபாரமாக விளையாடிய 19 வயதான ஷுப்மான் கில் 247 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். அதேவேளையில் ஹனுமான் விகாரி 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இந்தியா ஏ அணி 90 ஓவர்களில் 365 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது ஷுப்மான் கில் 204, ஹனுமா விஹாரி 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தனர்.

    இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மான் கில்.

    இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில்  20 வயதில் கவுதம் காம்பீர் 218 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 
    Next Story
    ×