என் மலர்

  செய்திகள்

  அஸ்வின் உடன் மைக் ஹெஸ்சன்
  X
  அஸ்வின் உடன் மைக் ஹெஸ்சன்

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் மைக் ஹெஸ்சன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெஸ்சன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
  நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மைக் ஹெஸ்சன். இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

  இந்நிலையில் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  இதுத்தொடர்பாக அவர் கூறுகையில் ‘‘கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஒரு வருடமாக சந்தோசமாக வேலைப்பார்த்தேன். அவர்கள் என்னை தலைமை பயிற்சியாளராக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  மைக் ஹெஸ்சன்

  இந்த வருடம் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு போக முடியவில்லை என்பது ஏமாற்றமே. பஞ்சாப் அணி கோப்பையை வெல்வது மிகத் தொலைவில் இல்லை. வருங்காலத்தில் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்’’ என்றார்.
  Next Story
  ×