search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்
    X
    வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்

    டி 20 கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    லாடெர்ஹில்:

    இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இதில் ஷிகர் தவான் 23 ரன்னிலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ரோகித் சர்மா பந்தை விளாசிய காட்சி

    அதற்கு பின் ரிஷாப் பண்ட் 4 ரன்னிலும், விராட் கோலி 28 ரன்னிலும், மணீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

    கடைசியில் குருணால் பாண்ட்யா 20 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஒஷானே தாமஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கீமோ பால் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.  தொடக்க வீரர்களாக சுனில் நரேன், லீவிஸ் களம் இறங்கினர்.  ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் ஆணி வீரர்கள் லீவிஸ் 0 (2), சுனில் நரேன் 4(12) ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அடுத்துவந்து களம் இறங்கிய புரான், போவல் இருவரும் நிதான முறையில் ரன்களை குவிக்க தொடங்கினர்.  இவர்களது ஜோடியை இந்திய அணி வீரர் பாண்டியா ஆட்டத்தின் 13வது ஓவரில் பிரித்தார்.  புரான் 19 (34), போவல் 54 (34) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

    இதனையடுத்து பொல்லார்டு, ஹெட்மெயர் இவரும் இணைந்து ரன்களை எடுக்க துவங்கிய நேரத்தில் ஆட்டத்தின் 15வது ஓவரில்  மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.  இறுதியில் இந்திய அணி டக்வர்த் லீவிஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணி தரப்பில் குருணால் பாண்டியா 2 விக்கெட்களையும், வாசிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  ஆதலால்  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×