search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜூ
    X
    ராஜூ

    காரைக்குடி காளைக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் அரைசதத்தால் காரைக்குடி காளை அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 9-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

    கோபிநாத்

    இந்த ஜோடி 11.2 ஓவரில் 108 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ 38 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராஜூ அவுட்டாகிய சிறிது நேரத்தில் கோபிநாத் 40 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கவுசிக் காந்தி 21 பந்தில் 32 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×