என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சகா, டுபே அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி முன்னிலை
Byமாலை மலர்26 July 2019 9:32 AM GMT (Updated: 26 July 2019 9:32 AM GMT)
நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சகா மற்றும் டுபே ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நார்த் சவுண்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதீம் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 228 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இருவரின் அரைசதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்துள்ளது. சகா 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் இதுவரை 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பன்சால் 49 ரன்களும், அடுத்து வந்த ஷுப்மான் கில் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் சகா மற்றும் ஷிவம் டுபே ஆகியோர் அரைசதம் அடித்தனர். டுபே 71 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இருவரின் அரைசதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்துள்ளது. சகா 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் இதுவரை 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
Next Story
×