என் மலர்

  செய்திகள்

  இம்ரான் கான்
  X
  இம்ரான் கான்

  பாகிஸ்தானை உலகின் சிறந்த அணியாக முன்னேற்ற வேலை நடந்து வருகிறது: இம்ரான் கான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகின் சிறந்த அணியாக முன்னேற்ற வேலைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் உறுதி அளித்தார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் வேதனை அளித்தது.

  மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

  இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகத்தரம் வாய்ந்த சிறந்த அணியாக முன்னேற்ற வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று உறுதியளித்துள்ளார்.

  இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘அடுத்தத் தொடரில் உலகின் தலைசிறந்த அணியாக பாகிஸ்தான் அணியை முன்னேற்ற வேலை நடந்து வருகிறது. சிறந்த வீரர்கள் அணிகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்த வார்த்தையை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

  1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் பிரதமர்தான கவுரவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×