search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர் பெடரர்
    X
    ரோஜர் பெடரர்

    4-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்

    ஜோகோவிச்சுக்கு எதிரான 4-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி போட்டியை 2-2 என சமநிலைப் படுத்தினார் ரோஜர் பெடரர்.
    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - பெடரர் பலப்பரீட்சை நடத்தி வருகிறார்கள். முதல் செட்டை ஜோகோவிச்  7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார். 3-வது செட்டை ஜோகோவிச்  7(7)-6(4) எனக் கைப்பற்றினார்.

    ஜோகோவிச் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்ததால் 4-வது செட்டை இழந்து விட்டால் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலை பெடரருக்கு இருந்தது. இதனால் வெற்றி பெற்றேயாக வேண்டும் என் உத்வேகத்துடன் விளையாடினார்.  இதில் 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார்.

    இதனால் நான்னு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்தாவது செட்டில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
    Next Story
    ×