என் மலர்

  செய்திகள்

  ரோஜர் பெடரர் ரபெல் நடால்
  X
  ரோஜர் பெடரர் ரபெல் நடால்

  விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்-அகுட், நடால் - பெடரர் பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜோகோவிச் - அகுட், நடால் - பெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  விம்பிள்டன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் டேவிட் கோபினை 6-4, 6-0, 6-2 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாடிஸ்ட்டா அகுட் - குய்டோ பெல்லா ஆகியோர் மோதினார்கள். அகுட் முதல் இரண்டு செட்டுகளையும் 7-5, 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை பெல்லா 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 4-வது செட்டிற்கு சென்றது. ஆனால் 4-வது செட்டை அகுட் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் பெல்லாவை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அகுட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

  ஜோகோவிச் அகுட்

  மற்றொரு காலிறுதியில் 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஜப்பானைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை நிஷிகோரி 6-4 எனக் கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட பெடரர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது மற்றும் 4-வது செட்டுகளை முறையே 6-4, 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

  4-வது காலிறுதியில் 3-ம் நிலை வீரரான ரபெல் நடால் தரைநிலை பெறாத சாம் குயெரியை எதிர்கொண்டார். இதில் நடால் 7-5, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

  நாளை நடக்கும் அரையிறுதியில்  ஜோகோவிச் - பாடிஸ்ட்டா அகுட், ரோஜர் பெடரர் - ரபெல் நடால் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  Next Story
  ×