search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்
    X
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: 8 அணிகளுக்கு 45 வீரர்கள்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 பேரை வாங்கியது

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றதில் 8 அணிகள் 45 வீரர்களை வாங்கியுள்ளது.
    4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 ஆட்டங்கள் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த போட்டியில் முதல் முறையாக அணிகள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை விடுவித்து 3 வீரர்களை வாங்கி கொள்ளலாம்.

    ஒரு அணியில் குறைந்தபட்சமாக 16 வீரர்களும், அதிகபட்சமாக 22 வீரர்களும் இடம் பெறலாம். இதில் 2 பேர் மாவட்ட வீரர்களாக இருக்க வேண்டும். வீரர்கள் பரிமாற்றம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள் போக ஒவ்வொரு அணிக்கும் தேவையான வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.

    இதற்கான பட்டியலில் மொத்தம் 878 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் எல்லா அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்தனர்.

    மொத்தத்தில் 45 வீரர்கள் 8 அணிகளால் வாங்கப்பட்டனர். இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ரஞ்சி கிரிக்கெட் வீரர் தமிழ் குமரன் உள்பட 9 வீரர்களை எடுத்தது. ஏற்கனவே 17 வீரர்களை தன்வசப்படுத்தி இருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஜி. பெரியசாமி, டி.ராகுல், தாவித்குமார், ஜெப செல்வின், சந்தான சேகர் ஆகிய 5 வீரர்களை வாங்கியது.

    கோவை கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் மலோலன் ரங்கராஜன் உள்பட 3 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ் 7 வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் 7 வீரர்களையும், காஞ்சி வீரன்ஸ் 4 வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை தலா 5 வீரர்களையும் புதிதாக வாங்கின.

    வீரர்கள் தேர்வு குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா. சிவந்தி ஆதித்தன் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நினைத்த பந்து வீச்சாளர்களை வாங்கி விட்டோம். ஜெப செல்வின் திறமை மிக்க வீரர். அதை இந்த சீசனில் நீங்கள் பார்க்கலாம்’ என்றார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த சீசனுக்காக அணிகளின் ஒட்டு மொத்த வீரர்கள் பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: விஜய் சங்கர், கோபிநாத், எம்.அஸ்வின், ஹரிஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னிகுமார் சிங், சம்ருத் பட், அருண்குமார், பி.ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், அலெக்சாண்டர், சசிதேவ், கார்த்திக், கவுசிக் காந்தி, ஜி.பெரியசாமி, டி.ராகுல், தாவித் குமார், ஜெபசெல்வின், சந்தானசேகர்.

    தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்: வாஷிங்டன் சுந்தர், அதிசயராஜ் டேவிட்சன், அக்‌ஷய், சீனிவாசன், ஆஷித் ராஜீவ் சங்கனகல், தினேஷ், எஸ்.அபிஷேக், வெங்கடேஷ், நிதிஷ், ராஜகோபால், பூபாலன், ஷூபம் மேத்தா, கணேஷ் மூர்த்தி, ஆனந்த் சுப்பிரமணியன், வசந்த் சரவணன், சுப்பிரமணி சிவா, தமிழ்குமரன், கமலேஷ், சத்யராஜ், செந்தில் நாதன், எஸ்.பி.நாதன், ஆகாஷ் சிவன், கார்த்திகேயன், ராகுல் ராஜ், வில்கின்சன் விக்டர்.

    கோவை கிங்ஸ்: அந்தோணி தாஸ், நடராஜன், அபினவ் முகுந்த், விக்னேஷ், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், சுரேஷ் குமார், சுரேஷ்பாபு, ராஜேஷ், அஸ்வின் வெங்கட்ராமன், ராஜா, முகமது அட்னன் கான், மணிகண்டன், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம், அனிருத் சீதாராம், மலோலன் ரங்கராஜன், முகமது ஆஷிக், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ்.

    மதுரை பாந்தர்ஸ்: வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் தன்வார், ரஹில் ஷா, தலைவன் சற்குணம், கவுசிக், நிலேஷ் சுப்பிரமணியன், ரோகித், து‌ஷர் ரஹேஜா, கிரண் ஆகாஷ், லோகேஷ் ராஜ், சபின் சோமத்தா கர்னாவர், பிரமோத், அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன், ஆகாஷ் சும்ரா, ஆர்.மிதுன், முருகானந்தம், சுதன் சஞ்சீவி, கான்டீபன், செல்வகுமரன், சரத்ராஜ், வீரமணி.

    திருச்சி வாரியர்ஸ்: சஞ்சய், சோனு யாதவ், விஜய், கணபதி சந்திரசேகர், சுரேஷ்குமார், அரவிந்த், விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, சரவணகுமார், திலக், பாபா இந்திரஜித், பரத் சங்கர், கே.விக்னேஷ், சாய் கிஷோர், ஆதித்யா கணேஷ், சத்ய நாராயணன், ஆதித்யா பாரூக், கே.முகுந்த், நியான் ஷியாம் காங்கயன், ரத்னம், ரூபன் ராஜ்.

    காஞ்சி வீரன்ஸ்: லோகேஷ்வர், விஷால் வைத்யா, ஆஷிக் ஸ்ரீனிவாஸ், முகிலேஷ், அருண், தீபன் லிங்கேஷ், சித்தார்த், பிரான்சிஸ் ரோக்கின்ஸ், திவாகர், மொகித் ஹரிஹரன், விஷால், ஸ்ரீராம், பாபா அபராஜித், ஆர்.சிலம்பரசன், சஞ்சய் யாதவ், ஆர்.சதீஷ், ஹரிஷ், சுதேஷ், கவுதம் தாமரை கண்ணன், சுகேந்திரன்,

    திண்டுக்கல் டிராகன்ஸ்: சதுர்வேத், ஹரி நிஷாந்த், முகமது, ரோஹித், ஆதித்யா அருண், அபினவ், எம். சிலம்பரசன், திரிலோக் நாக், கவுசிக், வருண், தோதாத்திரி, ஜெகதீசன், விவேக், ஆர்.அஸ்வின், சுமந்த் ஜெயின், கார்த்திக் சரண், யாழ் அருள்மொழி, சுஜய், பிரணேஷ், அன்பு.

    காரைக்குடி காளை: தினேஷ் கார்த்திக், அனிருதா, யோமகேஷ், கவின், சூர்யபிரகாஷ், லட்சுமண், ஆதித்யா, கி‌ஷன்குமார், மான் கே பாப்னா, அஷ்வத் முகுந்தன், சுவாமி நாதன், அஜித் குமார், கணேஷ், ஸ்ரீனிவாசன், ராஜ்குமார், மோகன் பிரசாத், ஷாஜகான், கருப்பசாமி, சுனில் சாம், அஸ்வின் குமார், அபினவ் விஷ்ணு, அஸ்வின் பாலாஜி.
    Next Story
    ×