என் மலர்

  செய்திகள்

  ரோஜர் பெடரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்
  X

  ரோஜர் பெடரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்.
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரரும், 3-ம் நிலை வீரருமான ரபெல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

  செம்மண் தரையில் ராஜாவாக திகழும் நடாலுக்கு எதிராக பெடரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் செட்டை 6-3 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான டொமினிக் தியெமும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  Next Story
  ×