search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா
    X

    டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma
    டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 30 ரன் எடுத்தார். 12-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்னை தொட்டார்.

    31 வயதான ரோகித் சர்மா 294 இன்னிங்சில 8,018 ரன் எடுத்து உள்ளார். சராசரி 32.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 133.36 ஆகும். 6 சதமும், 53 அரைசதமும் எடுத்து உள்ளார்.



    20 ஓவரில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 3-வது இந்தியர் ஆவார். ரெய்னா, கோலி ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். சர்வதேச அளவில் 8-வது வீரர் ஆவார்.

    ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2331 ரன்னும், ஐபிஎல்-லில் 4716 ரன்னும் எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மற்ற ரன்களை எடுத்தார்.
    Next Story
    ×