
நேற்றைய டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தது. இதனால் ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.
சூப்பர் ஓவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மக்களவை தேர்தல் வருடம் ஆகிய மூன்றுக்கு இடையில் ஒற்றுமை உள்ளது. ஆம்!!! 2009-ம் ஆண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சூப்பர் ஓவரை சந்தித்தது. 2014-ம் ஆண்டிலும் சூப்பர் ஓவரை சந்தித்தது. தற்போதும் சூப்பர் ஓவரை சந்தித்துள்ளது.
இந்த மூன்று வருடமும் மக்களை தேர்தல் நடைபெற்ற ஆண்டாகும். இந்த மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.