search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 187 ரன்னில் சுருண்டது
    X

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 187 ரன்னில் சுருண்டது

    ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது. #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பிரிட்ஜ் டவுனில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 381 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.


    பேர்ஸ்டோவ்

    93 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொயீன் அலி தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து 61 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மொயீன் அலி 60 ரன்னும், பேர்ஸ்டோவ் 52 ரன்னும், போக்ஸ் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.


    மொயீன் அலி

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து இருந்தது. பிராத்வைட் 11 ரன்னுடனும், கேம்பல் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
    Next Story
    ×