search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் நலக்குறைவால் சிட்னி ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் பங்கேற்கமாட்டார்: ஆஸ்திரேலியா
    X

    உடல் நலக்குறைவால் சிட்னி ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் பங்கேற்கமாட்டார்: ஆஸ்திரேலியா

    உடல் நலக்குறைவால் இந்தியாவிற்கு எதிரான சிட்னி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் சிட்னியில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.

    அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×