search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் டு பிளிசிஸ் கவலை
    X

    உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் டு பிளிசிஸ் கவலை

    உலகக்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? வெளிநாட்டில் நடத்தப்படுமா? என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

    இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.



    ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×