என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பும்ரா, புவியை அழைக்க இந்தியாவிற்கு நெருக்கடி அளித்துவிட்டோம்- வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர்
Byமாலை மலர்27 Oct 2018 3:29 PM IST (Updated: 27 Oct 2018 3:29 PM IST)
முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி பும்ரா, புவியை மீண்டும் அணிக்கு அழைக்க இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்துவிட்டோம் என ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்த போதிலும் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால், 2-வது போட்டியை ‘டை’ செய்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், அடுத்துவரும் 2 போட்டிகளில் வென்று தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், வேறு வழியின்றி அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறும்போது ‘‘கடந்த இரு போட்டிகளில் எங்கள் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் வேறுவழியின்றி இந்திய அணி பும்ராவையும், புவனேஸ்வர் குமாரையும் அழைத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். இதைத்தவிர வேறு காரணம் ஏதும் இருக்க முடியாது என்று நம்புகிறேன். இந்த நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது எங்களின் பேட்ஸ்மேன்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உத்வேகத்தை நாங்கள் இழந்துவிடமாட்டோம்.
இந்திய வீரர்கள் தங்களுக்குள் கேள்விகளை கேட்கத் தொடங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்குள் கேட்டுக்கொள்ள ஏராளமான கேள்விகளை இந்திய அணியினர் கொடுத்தனர். இப்போது, இந்த நிலையில் நாங்கள் அந்தக் கேள்விகளுக்கு தகுந்த போதுமான பதில்களுடன் இருக்கிறோம்.
விராட் கோலி திறமையான வீரர். அவரின் பேட்டிங்கை நான் மிகவும் ரசிக்கிறேன். எப்படியாவது இந்தியக் கேப்டன் தவறு செய்வார் என்றுதான் எதிர்பார்க்கிறேன். கடந்த போட்டியில் 44 ரன்கள் சேர்த்திருந்தபோது தவறு செய்தார், ஆனால், அதைப் பயன்படுத்திக்கொள்ள தவறினோம். கோலி கடினமான பயிற்சி எடுப்பதால், களத்தில் அவருக்கு அனைத்தும் எளிதாக இருக்கிறது. அவரை வீழ்த்தவும் திட்டம் வகுத்து வருகிறோம். அவரும் மனிதர்தானே. எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அதை இறுக்கமாகப் பற்றிக்கொள்வோம்.
எங்கள் அணியின் ஹெட்மையர் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அனுபவம் குறைந்த வீரராக இருந்தபோதிலும் 2-வது போட்டியில் ஷா் ஹோப் அருமையாக சதம் அடித்தார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

Next Story
×