search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் டெஸ்ட்- இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள், விராட் கோலி அவுட்
    X

    ஐதராபாத் டெஸ்ட்- இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள், விராட் கோலி அவுட்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 190 ரன்னுக்குள் முதல் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. விராட் கோலி 45 ரன்கள் சேர்த்தார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்னுடனும், பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யாதவ் மீதமிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 26.4 ஓவரில் 88 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் லோகேஷ் ராகுல் திணறினார். லோகேஷ் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பிரித்வி ஷா 39 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி ஷா 52 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா மேலும் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பிரித்வி ஷா 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



    விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 19 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா 52 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்னுடனும், ரிஷப் பந்த் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×