என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்- சுனில் கவாஸ்கர்
Byமாலை மலர்28 Sep 2018 10:56 AM GMT (Updated: 28 Sep 2018 10:56 AM GMT)
இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனி உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என் கவாஸ்கர் கூறியுள்ளார். #MSDhoni
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 2018 ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
எம்எஸ் டோனி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டுமா என்று கேட்டால், கட்டாயம் டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் தொடரில் விளையாடினால், வளர்ந்து வரும் ஜார்க்கண்ட் வீரர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும்.
50-வது ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வாய்ப்புகள்தான் கிடைக்கும். ஆனால் நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடினால் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அது ஒருநாள் போட்டிக்கு பயன்படும்’’ என்றார்.

Next Story
×