என் மலர்

  செய்திகள்

  இந்திய அணியில் அனைவரும் அணுகக்கூடிய நபர் டோனி- அம்பதி ராயுடு
  X

  இந்திய அணியில் அனைவரும் அணுகக்கூடிய நபர் டோனி- அம்பதி ராயுடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எந்தவொரு வீரரும் எளிதாக அணுகக்கூடிய நபர் எம்எஸ் டோனி என்று இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். #MSDhoni2018
  ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வரும் 18-ந்தேதி எதிர்கொள்கிறது. 19-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அம்பதி ராயுடு இடம்பிடித்துள்ளார்.

  இந்த தொடர் குறித்து அம்பதி ராயுடு கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது உண்மையிலேயே அணிக்கு பெரிய இழப்புதான். எனினும், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் திறமையை நாங்கள் பெற்றுள்ளோம். டோனி கேப்டனாக இருந்தவர். எந்தவொரு வீரரும் அணுகக்கூடிய நபராகவே டோனி உள்ளார். அவர் எனக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளார்.  நான் மிடில் ஆர்டர் தரவரிசையில் களம் இறங்கி விளையாடுவதையோ, அணியில் இடம் பிடிக்க போட்டி இருப்பதையோ பற்றி சிந்திக்கவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். அதை விட்டுவிட்டு எனக்கு நானே நெருக்கடியை உருவாக்கிக் கொள்ளமாட்டேன்.

  உலகக்கோப்பை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக வந்துள்ளோம். தற்போது இது மட்டுமே மனதில் உள்ளது’’ என்றார்.
  Next Story
  ×