search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? திண்டுக்கல்- மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? திண்டுக்கல்- மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    ‘லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலி பையர்’ ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினமும், எலிமினேட்டர் ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்றும் நடைபெற இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இந்த இரண்டு ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன. அந்த இரண்டு ஆட்டங்களும் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 5 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராடும். திண்டுக்கல் அணி லீக் ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளது.

    தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும், குவாலிபையர் 2 ஆட்டத்தில் விளையாடும்.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டமான எலிமினேட்டரில் கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். கோவை அணி ‘லீக்‘ ஆட்டத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது.

    ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை நத்தத்திலும் இறுதிப் போட்டி 12-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    Next Story
    ×