search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு - சச்சின் தெண்டுல்கர்
    X

    புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு - சச்சின் தெண்டுல்கர்

    புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சச்சின் தெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார். #ENGvIND #Bhuvi
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

    விரைவில் காயம் குணமடைந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் காயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. நான் அவரிடம் அதிக அளவிலான ஆட்டத்தை எதிர்பார்த்தேன். அவரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் அவருடைய ஸ்விங் திறமை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

    புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள ரன்களையும் மறந்து விடக்கூடாது. கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த வகையில் பார்ட்னர்ஷிப் கொடுக்கக்கூடியவர். இருந்தாலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.
    Next Story
    ×