search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சியிடம் ஆட்டோகிராப் வாங்க தனது சைக்கிளுடன் ரஷியா சென்ற கேரள வாலிபர்
    X

    மெஸ்சியிடம் ஆட்டோகிராப் வாங்க தனது சைக்கிளுடன் ரஷியா சென்ற கேரள வாலிபர்

    கேரளாவைச் சேர்ந்த வாலிபர் கால்பந்து வீரர் மெஸ்சியிடம் ஆட்டோகிராப் வாங்க தனது சைக்கிளுடன் ரஷ்யா சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #ClifinFrancis
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டிக்காக இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். பல கால்பந்து ரசிகர்கள் கால்பந்து அணியின் கொடி அல்லது வீரர்களின் புகைப்படங்களை வீட்டின் சுவரில் பொருத்தி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் கிளிஃபின் பிரான்சிஸ். 28 வயதான இவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கால்பந்து வீரர் மெஸ்சியின் தீவிர ரசிகரான இவர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண வேண்டும் என எண்ணினார். இதையடுத்து, கேரளாவிலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஈரான் வழியாக கப்பலில் ரஷியா சென்றடைந்தார். அங்கிருந்து தனது சைக்கிளில் 600 கி.மீ. பயணம் செய்து போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல உள்ளார்.


    அங்கு நடக்கும் போட்டியை நேரில் பார்த்து விட்டு, மெஸ்சியிடன் தனது சைக்கிளில் ஆட்டோகிராப் வாங்குவதே தனது கனவு என்றார். பிப்ரவரி 23-ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய பிரான்சிஸ் தற்போது ரஷ்யா சென்றடைந்துள்ளார். தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். விரைவில் போட்டியை நேரில் காண்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FIFA2018  #ClifinFrancis

    Next Story
    ×