search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைவெளிக்குப்பின் மீண்டும் களமிறங்குகிறார் ஏபி டி வில்லியர்ஸ்
    X

    இடைவெளிக்குப்பின் மீண்டும் களமிறங்குகிறார் ஏபி டி வில்லியர்ஸ்

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஏபி டி வில்லியர்ஸ் உடல்நலம் பெற்றதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக விளையாடுகிறார். #IPL2018 #CSKvRCB
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 360 டிகிரி என்று அழைக்கப்படும் அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸ் இடம்பிடித்துள்ளார்.

    கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 30 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அதன்பின் 29-ந்தேதி கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்திலும், மே 1-ந்தேதி நடைபெற்ற மும்பை இந்தயின்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இடம்பெறவில்லை. கொல்கத்தாவிற்கு எதிராக தோல்வியடைந்த பெங்களூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    சனிக்கிழமையான நாளைக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. புனே அணியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான உடற்தகுதியை பெற்றுவிட்டார் என்று அந்த அணி தெரிவித்துள்ளது. இதனால் நாளை ஏடி பி வில்லியர்ஸ் விளையாடுவது உறுதியாகியுள்ளது.



    குயின்டாடி டி காக் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் சொந்த நாடு திரும்புகிறார். இதனால் டி காக்கிற்குப் பதிலாக டி வில்லியர்ஸ் சேர்க்கப்படலாம். இல்லையெனில் பார்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டு மனன் வோரா நீக்கப்படலாம்.

    இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி கூறுகையில் ‘‘டி வில்லியர்ஸ் உடற்தகுதி பெற்றுவிட்டார். குயின்டான் இந்த போட்டியில் விளையாடமாட்டார். குயின்டான் டி காக் விளையாடாததால் வீரர்கள் தேர்வு எங்களுக்கு எளிதாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×